தமிழகத்தில் பள்ளிகளை திறக்க சாத்தியக் கூறு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்

Join Our KalviNews Telegram Group - Click Here

 தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆன்லைனில் வகுப்புகள் எடுப்பதற்கு குறைந்த அளவில் ஆசிரியர்கள் போதும் என்பதால், பல தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.

அதே போல தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கேரளாவில் அடுத்தாண்டு பள்ளிகள் திறந்தாலும் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க சாத்தியக் கூறு இல்லை. தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க தனியாக இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

சம்பளம் வழங்காதது குறித்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தால் அரசு பரிசீலிக்கும். தமிழக அரசு பள்ளிகளில் 1,500 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர்

வேலையில்லாமல் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேவைப்பட்டால் அரசு பள்ளியில் தற்காலிக பணி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்