ஆசிரியர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்: பிரதமர் மோடி

Join Our KalviNews Telegram Group - Click Here

ஆசிரியர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்: பிரதமர் மோடி நாட்டில் மிகச் சிறந்த ஆசிரியப் பணியை மேற்கொண்டு நமக்காக கடினமாக உழைத்த ஆசிரியர்களுக்கு நன்றியுளள்வர்களாக இருப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.


ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நமது நாட்டின் புகழ்பெற்ற வரலாற்றுடன் நமக்கு உள்ள தொடர்பை வலுப்படுத்த அறிவார்ந்த ஆசிரியர்களை விட வேறு யாரால் முடியும். சமீபத்திய மனதின் குரல் நிகழ்ச்சியின் போது, ​​ஆசிரியர்களுக்கு ஒரு அன்பு யோசனையை முன் வைத்தேன், அதில், நமது மிகப்பெரிய சுதந்திர போராட்டத்தைப் பற்றி அறியப்படாத தகவல்களை மாணவர்களுக்கு கற்பிக்கும்படி அப்போது கேட்டுக் கொண்டேன்.

மாணவர்களின் அறிவை வடிவமைப்பதற்கும் நமது தேசத்தை கட்டியெழுப்புவதற்கும் ஆசிரியர்களின் பங்களிப்பும் கடின உழைப்பும் அளப்பரியது. அதற்காக ஆசிரியர்களுக்கு நாம் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். ஆசிரியர் தினத்தன்று, நமது ஆசிரியர்களின் குறிப்பிடத்தக்க முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்