ஆசிரியர்களுக்கு மக்கள் சேவகர் விருது!

Join Our KalviNews Telegram Group - Click Here

 ஆசிரியர்களுக்கு மக்கள் சேவகர் விருது!

. கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்ட ஆசிரியர்கள் இருவருக்கு மக்கள் சேவகர் விருது வழங்கப்பட்டது. 

 

கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவளால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அப்பொழுது ஆசிரியர்கள் கொரோனா வைரஸ் பரவல் தடுக்கும் வகையில், மருத்துவர்கள், வருவாய் மற்றும் போலீசாருடன் இணைந்து ஆசிரியர்களும் தன்னார்வலராக பணிபுரிந்தனர். அவர்கள், கொரோனா பாதித்த பகுதிகளில் வசிப்போருக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுத் தருவது போன்ற சமூக களப்பணியாற்றினர். இவர்களின் சேவையை பாராட்டி, சுதந்திர தின விழாவில் மக்கள் சேவகர் விருது வழங்கி, கவுரவிக்கப்பட்டது. 

 

விருத்தாசலம் டி.இ.ஓ., அலுவலகத்தில் நடந்த விழாவில், மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பாபாஜி, திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பாலசுப்ரமணியன் ஆகியோருக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் டி.இ.ஓ., பாண்டித்துரை சால்வை அணிவித்து, சான்றிதழ் கேடயம் வழங்கினார்.

 

இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்