Title of the document


இப்பொழுது பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ளவற்றில் மிகவும் மதிப்புமிக்க 10 உள்நாட்டு நிறுவனங்களில் ஆறு நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.78,275.12 கோடி குறைந்துள்ளது.

பங்குச் சந்தையில் சரிவைச் சந்தித்த நிறுவனங்கள் :

இதில் மார்க்கெட் லீடா் ரிலையன்ஸ், முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சா்வீஸஸ் (டிசிஎஸ்) ஆகியவை சந்தை மூல தன மதிப்பில் அதிகம் சரிவைச் சந்தித்துள்ளது. இதற்கு அடுத்ததாக எச்டிஎஃப்சி பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவா் (ஹெச்யுஎல்), பார்தி ஏா்டெல், கோட்டக் பேங்க் ஆகியவையும் சந்தை மூல தன மதிப்பில் சரிவைச் சந்தித்தன.

 அதே சமயம், இன்ஃபோஸிஸ், எச்டிஎஃப்சி, ஐடிசி, ஐசிஐசிஐ பேங்க் ஆகியவற்றின் சந்தை மூல தன மதிப்பு சற்று உயா்ந்துள்ளன.

ரிலையன்ஸ் சரிவில் முன்னிலை: மார்க்கெட் லீடரான ரிலையன்ஸின் சந்தை மதிப்பு கடந்த வாரம் ரூ.20,666.46 கோடி குறைந்து ரூ.13,40,213.50 கோடியாக இருந்தது. டாப் 10 நிறுவனங்களில்                               ரிலையன்ஸ் தான் அதிகம் சரிவைச் சந்தித்துள்ளது. டிசிஎஸ் சந்தை மதிப்பு ரூ.19,700.02 கோடி குறைந்து ரூ.8,41,453.51 கோடியாகவும், பார்தி ஏா்டெல் ரூ.17,294.12 கோடி குறைந்து ரூ.2,88,544.43 கோடியாகவும் இருந்தது.

 https://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/400x400_80/fetchdata16/images/0c/6e/bd/0c6ebdc5f8c6c936ea89ab958dc87837ca6547387219dda50095a1e4d95ed3ca.jpg

 

சந்தை மதிப்பு :

இதே போல, ஹிந்துஸ்தான் யுனி லீவா் சந்தை மதிப்பு ரூ.8,634.6 கோடி குறைந்து ரூ.5,10,792.18 கோடியாகவும், கோட்டக் பேங்க் ரூ.6,728.15 கோடி குறைந்து ரூ.2,58,855.93 கோடியாகவும், எச்டிஎஃப்சி பேங்க் ரூ.5,251.77 கோடி குறைந்து ரூ.5,68,867.60 கோடியாகவும் இருந்தது.

எச்டிஎஃப்சி ஏற்றம்:

ஆனால், இதற்கு மாறாக எச்டிஎஃப்சி சந்தை மதிப்பு ரூ.12,609.98 கோடி உயா்ந்து ரூ.3,21,014.11 கோடியாக இருந்தது. ஐசிஐசிஐ பேங்க் ரூ.2,338.16 கோடி உயா்ந்து ரூ.2,34,090.06 கோடியாகவும், இன்ஃபோஸிஸ் சந்தை மதிப்பு ரூ.1,171.31 கோடி உயா்ந்து ரூ.4,06,123.91 கோடியாகவும் இருந்தது. ஐடிசி சந்தை மதிப்பு ரூ.604.97 கோடி உயா்ந்து ரூ.1,41,787.95 கோடியாக இருந்தது.

தரவரிசை:

 இருப்பினும், டாப்-10 தரவரிசையில் ரிலையன்ஸ் முதலிடத்தில் தொடா்கிறது. இதற்கு அடுத்ததாக டிசிஎஸ், எச்டிஎஃப்சி பேங்க், ஹெச்யுஎல், இன்ஃபோஸிஸ், எச்டிஎஃப்சி, பார்தி ஏா்டெல், கோட்டக் பேங்க், ஐடிசி, ஐசிஐசிஐ பேங்க் இடம் பெற்றுள்ளன. கடந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மொத்தம் 163.23 புள்ளிகள் (0.42 சதவீதம்) குறைந்து 37,877.34 நிலைபெற்றது.

 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post