Title of the document
 அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் , சென்னை - 600 006 .


 முனைவர் . மு . பழனிச்சாமி , அரசுத் தேர்வுகள் இயக்குநர் ( முழு கூடுதல் பொறுப்பு ) ந.க.எண் . 127311 / எச் 1 / 2019 நாள் . -07.2020 பொருள் : அரசுத் தேர்வுகள் இயக்ககம் , சென்னை -6 - மார்ச் 2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு - 24.03.2020 நடைபெற்ற தேர்வினை தேர்வெழுத முடியாத தேர்வர்களுக்கு மறு தேர்வு நடத்துதல் - தகவல் தெரிவித்தல் - சார்பு . பார்வை : 1 அரசாணை ( நிலை ) எண் .54 , பள்ளிக்கல்வி ( அ.தே ) துறை , நாள் .09.06.2020 , 2. அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் , ந.க.எண் . 125746/11 / 2019 , நாள் .09.06.2020 

2019-2020 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகள் இரத்து செய்யப்படுகிறது எனவும் , 24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வினை எழுதாத தேர்வர்களுக்கு நடத்தப்படவிருந்த மறு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது எனவும் , மறுதேர்விற்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பார்வை -1 ல் கண்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . 1. 24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்விற்கான வேதியியல் , கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் பாடத் தேர்வுகளை தேர்வு எழுத முடியாத தேர்வர்களுக்கு மட்டும் 27.07.2020 அன்று பள்ளி மாணவர்கள் ( School Students ) அவர்கள் படித்த பள்ளிகளிலேயே தேர்வெழுத வழிவகை செய்யப்பட்டுள்ளது , மேலும் தனித்தேர்வர்கள் ( Private Students ) பொறுத்தமட்டில் அவர்கள் ஏற்கனவே பிற தேர்வுகளை எழுதிய தனித்தேர்வு மையங்களிலேயே தேர்வுகள் நடத்தப்படவுள்ளது .

மேற்கண்டவாறு மறுதேர்விற்கு வருகை புரியும் தேர்வர்களுக்கு 13.07.2020 முதல் 17.07.2020 வரையிலான நாட்களில் புதிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை மாணவர்கள் பயின்ற அந்தந்த பள்ளியிலேயே இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . மேலும் , பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை தாங்களே இணையதளம் www.dge.tn.gov.in வாயிலாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .


 தனித்தேர்வர்கள் தாங்கள் ஏற்கனவே தேர்வு எழுதிய தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வுகூட நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம் . 3 , 27.07.2020 அன்று நடைபெறும் மறுதேர்விற்கு தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு பேருந்து வசதி தேவைப்படும் தேர்வர்களுக்கு சம்ர்ப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி போக்குல 2/3 செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் . 4. தேர்வு மையங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருப்பின் அத்தேர்வு மையங்களுக்கு அருகிலுள்ள பகுதியில் மாற்று தேர்வுத் மையங்கள் அமைக்கப்பட வேண்டும் . 5. தேர்வு மையங்களில் , 


தனிமைப்படுத்தப்பட்ட ( Containment Zonc ) பகுதிகளில் வசிக்கும் தேர்வர்களுக்கு தனி அறை ஒதுக்கீடு செய்து தேர்வெழுத உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் . 6. தேர்வு நடத்துவதற்கான - பிற வழிமுறைகள் அனைத்திற்கும் , அரசாணை ( நிலை ) எண் .246 , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் ( DM.II ) துறை நாள்.20.05.2020 ன் இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை ( SOP ) பின்பற்ற வேண்டும் . இத்துடன் அரசாணையின் நகல் இணைக்கப்பட்டுள்ளது . 7. 24.03.2020 அன்று நடைபெற்ற தேர்வினை எழுத முடியாத மாணவர்களுக்கு மேற்கண்ட தகவல்களை அறிவித்து தேர்வு எழுத உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

 8. தேர்வு நடத்துதல் குறித்து விரிவான சுற்றறிக்கை பின்னர் அனுப்பப்படும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது . ராமுகபொடி அரசுத் தேர்வுகள் இயக்குார்மு.கூ.பொ ) இணைப்பு : அரசாணை ( நிலை ) எண் .246 , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் ( DM.II ) துறை நாள்.20.05.2020- நகல் இணைக்கப்பட்டுள்ளது 9/1 பெறுநர் 1. அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் 2. இணை இயக்குநர் கல்வி பாண்டிச்சேரி 3. அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் 4. அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் நகல் 1. அரசு முதன்மைச் செயலாளர் , பள்ளிக் கல்வித்துறை , சென்னை -9 - தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது . 2. பள்ளிக் கல்வி ஆணையர் , சென்னை -6 - தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது . 3. இயக்குநர் , பள்ளிக் கல்வி இயக்ககம் , சென்னை -6 4. இயக்குநர் , தொடக்கக்கல்வி இயக்ககம் , சென்னை -6 5. இயக்குநர் , மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்ககம் , சென்னை -6
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post