Title of the document
 தற்போது கொரோனா  காரணமாக உலகம் முழுவதும் கல்வி நிலையங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன அதே போல நமது இந்தியா மற்றும் தமிழகத்திலும் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வித்திறன் கேள்விக்குறியாகி உள்ளது இது சம்பந்தமாக நமது கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் நேற்று அளித்த பேட்டியில் நமது தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொதிகை, கல்வித் தொலைக்காட்சி, பாலிமர், புதிய தலைமுறை, தந்தி என்று 5 தனியார் மற்றும் அரசு கேபிள் டிவி மூலமாக அவர்களுக்கு வீடுகளிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ளும் விதமாக பள்ளியின் பாடங்கள்  ஒலிபரப்பப்படும் என்று தெரிவித்திருந்தார்..


 தற்போது ஊரடங்கு காரணமாக முற்றிலும் அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டு இருக்கும் நிலையில் பல்வேறு தனியார் பள்ளிகள் போன்ற பல்வேறு செயல்கள் மூலமாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன ஆனால் இது அரசு பள் ஏற்படுத்த பல்வேறு சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளதால் அரசு பள்ளி பெற்றோர்களிடம் போதுமான இணையதள வசதி களும் ஆண்ட்ராய்டு செயலிகளை மொபைல்களும் இல்லாத காரணத்தால் இதை 100 சதவிகிதம் கொண்டு சேர்ப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்தன..

 இருப்பினும் அரசு பள்ளியில் தற்போது வாட்ஸ் அப் குலுக்கல் மூலமாக பல்வேறு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்காதவாறு இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இது சாத்தியமில்லை என்பதால் 5 சேனல்கள் தனியார் மற்றும் அரசு கேபிள் டிவி சானல்கள் மூலமாக குறிப்பிட்ட நேரத்திற்கு படங்களை ஒளிபரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்து இருந்தார்..

 நேற்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று பழைய பாடத்திட்டமே நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் நமது தனியார் பள்ளிகளிலும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளை போல நமது அரசு பள்ளிகளிலும் அனைத்து அரசு பள்ளிகளிலும் வரும் 13ம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறையை தொடங்கவும் தொடங்க உள்ளதாகவும் இது தனியார் தொலைக்காட்சிகள் மூலமாக ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு சேனல் என ஐந்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்..

 தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் சென்று சேர்ந்து விட்டதாகவும் மாணவர்களுக்கு உடனடியாக வழங்கி விட்டு இந்த பாடங்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார் அதாவது பொதிகை கல்வி தொலைக்காட்சி பாலிமர் புதிய தலைமுறை தந்தை என்று ஐந்து முக்கியமான தனியார் டிவி சானல்கள் மூலமாகவும் டிவிட்டர் மூலமாகவும் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி பாடங்கள் வரை ஒளிபரப்பப்படும் என்றும் மாணவர்கள் வீடுகளில் இருந்தவாறே பாடங்களை கற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் இருந்தாலும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து அறிவிப்பதில் ஒரு சில சிக்கல்கள் உள்ளன..

 ஏனெனில் அதில் 34 ஆயிரத்து 482 மாணவர்கள் கடைசி தேர்வை எழுத வில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார் இதில் 718 மாணவர்கள் மீண்டும் மறுதேர்வு எழுத ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார் அவர்களுக்கான தேர்வு முடிந்தவுடன் நான்கு நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நீட்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் 7200 மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது என்றும் நமது கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறியிருந்தார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post