Title of the document
உயிர் சங்கிலித்தொடரில்
தெருவோரப் பிராணிகளும் ஓர் அங்கம்

தெருவோரப் பிராணிகளை
பராமரிப்போம்!
பாதுகாப்போம்!

தமிழ் மண்ணுக்கே உரித்தான நாட்டு இனத்தை சார்ந்த பல உயிரினங்களையும் பராமரிக்காமல் விடுவதால் நாட்டு இன உயிரினங்கள் பல குறைந்து வருகிறது.
 ஆடுகள்,மாடுகள், கோழிகள்,  நாய்கள், பூனைகள், பறவைகள் என பல உயிரினங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து பராமரிக்கும் கலாச்சாரம் பரவி வருகிறது.
அது அவரவர் வாழ்க்கை முறை
சிந்தனையைப் பொறுத்து அமைகிறது.
அதே நிலையில் நமது சுற்றுசூழலுக்கும், தட்பவெட்ப நிலைக்கேற்ப உள்ள நாட்டு இன கால்நடைகள், செல்லப்பிராணிகள், பறவை இனங்கள் பராமரிப்பின்றி உள்ளன. ஒவ்வொரு உயிரினங்களும்  பூமிக்கும், உயிர்ச்சூழலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் உதவும் வகையிலேதான் படைக்கப் பட்டிருக்கின்றன. 

நம் வீட்டைச்சுற்றியே வளர்ந்து திரிந்து, நாம் போடும் உணவின் மிச்சத்தை உண்டு வீதியையும் வீட்டையும் சுத்தமாக வைத்து வருகிறது.
 மாநகர்ப்பகுதிகளில் மிச்சம் மீதி உணவுக் கழிவுகள் பிளாஸ்டிக் பைகளில் மடித்தே குப்பைத் தொட்டியில் வீசி விடுகின்றனர். உணவிற்காக வரும் பிராணிகள் பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்ட மீதமான உணவினை பிளாஸ்டிக்  பையுடன் உண்டு விடுகிறது.அது அப்பிராணியின் உயிருக்கே கேடாக அமைந்து விடுகிறது. நகர்ப்புறங்களில் போடப்படும் உணவு கழிவுகள் அப்படியே குப்பைக் கிடங்குக்குச் சென்றுவிடுகிறது. 
 இதனால்  தெருவோரப் பிராணிகளுக்கு உணவு இல்லாமல் போய்விட்டது. ஒவ்வொரு ஆடு, மாடும் நகர்ப்புறங்களில் வீட்டின் முன்பு  உணவுக்காக நிற்கும் சூழல் உருவாகிறது இதை அறிந்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் உள்ளிட்டோர் தனது இல்லத்தின் முன்பே தெருவோர பிராணிகளின் உணவு தேவைகளை போக்கும் விதமாக குடிநீர் தொட்டி, உணவு தொட்டி அமைத்து பராமரித்து வருகிறார்கள்.
உணவுத் தொட்டியில் காய்கறி, கீரைகள் கழிவுகளும் கால்நடைகளுக்கு உணவாகின்றன .
சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகளின் காய்கறி, கீரைகள் கழிவுகளும் கால்நடைகளுக்கு உணவாகின்றன . இதனால் பல கால்நடைகளின் உணவு தேவை பூர்த்தியாகிறது.சுற்றுப்புறமும் தூய்மையாக இருக்கின்றது என்கின்றனர் பொதுமக்கள்.
மேலும் தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்தால் அந்த வகை நாய் இனம் வருங்காலத்தில் குறைந்து விடும். எனவே பொதுமக்கள் தெருவோர பிராணிகளையும் பராமரிக்க வேண்டும் என்கின்றனர்.
உயிர்ச்சங்கிலி தொடர் உன்னதமான ஒன்று சங்கிலித் தொடர் அறுபட்டால் அதன் எதிர்விளைவாக, அந்தந்த பகுதிகளில் வாழும் அனைத்து உயிரினங்களுக்குமே ஏதாவது ஒரு பாதிப்பு வரவே செய்யும் என தெருவோரப் பிராணிகளுக்கு குடும்ப சகிதமாக உணவளித்து வருகிறார்கள்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post