Title of the document
12th Std Re-Exam Hall Ticket - 2020 நாளை வெளியீடு !!

பிளஸ் 2 மறுதேர்வு எழுதும் மாண வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை (ஜூலை 13) வெளியிடப்பட உள்ளது.

ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 இறுதித்தேர்வில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு ஜூலை 27-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட உள்ளது.

இதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை (ஹால் டிக்கெட்) மாணவர்கள் நாளை (ஜூலை 13) முதல் ஜூலை 17-ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இணையதள வசதி இல்லாத மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு மையங்களிலும் நேரடியாக சென்று பெற்றுக் கொள்ளலாம். மேலும், தேர்வு மையங்கள் மாணவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளிலேயே அமைக்கப்பட உள்ளன.

கூடுதல் விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று தேர்வுத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post