மாணவர்கள் கல்வி கற்க 10 தொலைக்காட்சி சேனல்கள் தயார்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி !!

Join Our KalviNews Telegram Group - Click Here
 மாணவர்கள் கல்வி கற்க 10 தொலைக்காட்சி சேனல்கள் தயார்: செங்கோட்டையன்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25 முதல் இந்தியா மற்றும் தமிழகம் முழுவதும் பல கட்டங்களாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தொற்று குறைந்த இடங்களில் தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது. ஆனால், பள்ளிகளை மீண்டும் திறக்க ஏதுவான சூழல் இன்னும் உருவாகவில்லை என்று அரசு அறிவித்திருந்தது. இதனிடையே ஆன்லைன் மூலம் மாணவர்கள் கல்வி கற்க அரசு திட்டம் வகுத்தது.

ஆனால், அதற்கு பல்வேறு தரப்பினர் இடையே பலத்த எதிர்ப்பு எழுந்தது. ஆன்லைன் கல்வி ஏழை மாணவர்களுக்கு முடியாத விஷயமாக பலராலும் விமர்சிக்கப்பட்டது. அதே நேரம் மாணவர்கள் கண்களுக்கு பாதிப்பு உண்டாகும் என்று பலரும் தெரிவித்தனர். இந்நிலையில் அனைத்து தரப்பு மாணவர்களும் பயன் அடையும் வகையில் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு பள்ளிப் பாடம் கற்றுக் கொடுக்க முடிவு செய்துள்ளது.


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இது குறித்து பேசியதாவது, ' ஆன்லைன் மூலம் பாடம் நடத்தினால் மாணவர்களுக்கு கண்பார்வை பாதிக்கப்படும் என்பதால் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 10 தொலைக்காட்சி சேனல்கள் தயாராக உள்ளது.

கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்தவுடன் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்