Title of the document

காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி - தேர்வுத்துறை

IMG-20200619-WA0010
10,  11ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு,  அரையாண்டு தேர்வில் எத்தனைமதிப்பெண் பெற்றிருந்தாலும் அரசாணையின்படி அனைவருக்கும்  தேர்ச்சி என தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு. உடனடியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க உத்தரவு.

இந்தத் தேர்வுகள் இரத்து செய்யப்பட்ட காரணத்தால் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாகின்றனர் . மாணவர்களது மதிப்பெண் மதிப்பீடு அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவிகித மதிப்பெண்களும் , வருகைப் பதிவின் அடிப்படையில் 20 ) சதவிகித மதிப்பெண்களும் வழங்கப்படுமென அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் , இவ்வரசாணையின்படி மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகக் கருதப்படுவர் . எனவே , இவ்விவரத்தினை தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது

 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post