சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளிக்கு, 'சீல்'

Join Our KalviNews Telegram Group - Click Here

 சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளிக்கு, 'சீல்'


திருச்செங்கோடு அருகே, ஊரடங்கு விதிமுறையை மீறி, சிறப்பு வகுப்பு எடுத்த தனியார் பள்ளிக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே, புதுபுளியம்பட்டியில், தனியார் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது.

ஊரடங்கு காலத்தில், பள்ளியில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுவதாக, கலெக்டர் மெகராஜுக்கு தகவல் கிடைத்தது.நேற்று மாலை, 3:00 மணியளவில், ஆர்.டி.ஓ., மணிராஜ் தலைமையிலான குழுவினர், திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், பள்ளியின் இரண்டாவது தளத்தில், ஒன்பதாம் வகுப்பிலிருந்து, 10ம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்ற, மாணவ - மாணவியர், 25-க்கும் மேற்பட்டோருக்கு சிறப்பு வகுப்பு நடப்பது தெரிந்தது.இதையடுத்து, பள்ளிக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. பள்ளி முதல்வர் மீது வழக்குப் பதிவு செய்யவும், போலீசாருக்கு, ஆர்.டி.ஓ., அறிவுறுத்தினார்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்