Title of the document


பிளஸ் 2 தேர்வு எழுத தவறியவர்கள் பள்ளிக்கு வந்து கடிதம் தர உத்தரவு

 

சென்னை; பிளஸ் 2 தேர்வு எழுத தவறிய மாணவர்கள், பள்ளிக்கு வந்து விருப்ப கடிதம் தர வேண்டுமென்ற உத்தரவால், புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

குழப்பம்


தேர்வுத்துறை இயக்குனர் பழனிச்சாமி வெளியிட்ட சுற்றறிக்கை:

பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் படித்து, மார்ச், 24ல் பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்கள், மறு தேர்வு எழுத விரும்புகின்றனரா என, தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களை பள்ளிக்கு வரவைத்து, தேர்வு எழுதுவதற்கான விருப்ப கடிதத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

மாணவரின் பெயர், தேர்வு எண், தேர்வு மைய எண் போன்ற விபரங்கள், விண்ணப்பத்தில் இடம் பெற வேண்டும். இந்த விருப்ப கடிதங்களை, வரும், 26ம் தேதிக்குள் அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையால், பள்ளி மாணவர்கள் குழப்பம் அடைந்துஉள்ளனர். கொரோனா ஊரடங்கால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள மக்கள், வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உள்ளது.வசதி இல்லைபள்ளிகளுக்கு மாணவர்கள் செல்ல போக்குவரத்து வசதி இல்லை. மேலும், கொரோனா பரவல் பிரச்னையால், மாணவர்கள் வீட்டில் இருந்து வெளியே போக முடியாத நிலையில், இந்த உத்தரவை எப்படி செயல்படுத்துவது என, தலைமை ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post