Title of the document
ஆன்லைன் வானியல் முகாம் தொடங்கியது மாணவ, மாணவிகள் உற்சாகம்

இந்து தமிழ் திசை’, ‘ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப்’ நடத்தும் ஆன்லைன் வானியல் முகாம் தொடங்கியது மாணவ, மாணவிகள் உற்சாகம் 

சென்னை

 ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப்’ இணைந்து நடத்தும் பள்ளி மாண வர்களுக்கான 3 நாள் ஆன்லைன் வானியல் முகாம் நேற்று தொடங் கியது.



  கரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்கும் மாணவர் களின் பொன்னான நேரத்தை பயனுள்ள வழியில் செலவழிக்கும் வகையில் பல்வேறு ஆன்லைன் நிகழ்ச்சிகளை ‘இந்து தமிழ் திசை’ தொடர்ந்து நடத்தி வருகிறது. அந்த வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப்’புடன் (எஸ்எஸ் எல்சி) இணைந்து 4-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகளுக்காக 3 நாள் வானியல் முகாமை ஏற்பாடு செய்துள்ளது.

  இந்த ஆன்லைன் முகாம் நேற்று தொடங்கியது. 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பெற்றோர் இதில் பங்கேற்றனர். வானியல் பயிற்சியாளர் வினோத்குமார் கலந்துகொண்டு வானியல் குறித்து எடுத்துரைத்தார். வானியல் குறித்த அடிப்படை விவரங்கள், வானில் நிகழும் முக்கிய நிகழ்வுகள், பிரபஞ்சம், பால்வெளி மண்டலம், கோபர்நிகஸ், கலிலியோ உள்ளிட்ட வானியலாளர்களின் கோட்பாடு கள், தொலைநோக்கி வருகைக்குப் பிறகு வானியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி, வெவ்வேறு காலண்டர் முறை உள்ளிட்டவற்றை எளிய முறையில் விளக்கினார்.



  தொடர்ந்து வானியல், பிரபஞ் சம், கோள்கள், நட்சத்திரங்கள் தொடர்பாக மாணவ, மாணவிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவர்களது சந்தேகங்கள், கேள்வி களுக்கு வினோத்குமார் விளக்கம் அளித்தார். இந்த ஆன்லைன் வானியல் பயிற்சி முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதன் வீடியோ பதிவை யூடியூப் சேனலில் (https://www.youtube.com/watch?v=Ey1NMEtZExo) பார்க்கலாம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post