Title of the document
‘நீட்’ தேர்வுக்கு ஆன்லைனில் பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஈரோடு



நீட் தேர்வினை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு ஆன் லைனில் இலவச பயிற்சி அளிக்கப் படுகிறது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரி வித்துள்ளார்.

கோபி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என 350 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கி னார். அப்போது, செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:

  பிளஸ் 1 பொதுத்தேர்வில் ஒரு பாடத்தேர்வு நடத்தப்பட வேண்டியது உள்ளது. கரோனா கட்டுக்குள் வந்தவுடன் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும். நீட் தேர்வுக்கு நியூபாக்ஸ்என்ற நிறுவனத்தின் மூலம் இன்று (நேற்று) முதல் அனைவருக்கும் இலவசமாக ஆன்லைன் மூலமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.



  நூலகங்களில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்ளுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எஸ்எஸ்எல்சி தேர்வு அட்டவணையில், போதிய கால இடைவெளி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், கோபி கோட்டாட்சியர் ஜெயராமன், நகராட்சி ஆணையர் தாணுமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post