Title of the document
வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1935 ஆம் ஆண்டு சட்டப்படி 1937 ஆம் ஆண்டு தேர்தல்கள் நடந்தன . சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று சி . ராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைச்சரவை பதவியேற்றது . அவரது அமைச்சரவையில் ஒன்பது அமைச்சர்கள் இருந்தனர் . 1937 ஜூலை முதல் 1939 அக்டோபர் வரை இந்த அமைச்சரவை பதவியில் நீடித்தது . இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதைக் கண்டித்து காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகியபோது ராஜகோபாலாச்சாரி அமைச்சரவையும் பதவி விலகியது . இரண்டாம் உலகப் போரின்போது , கிரிப்ஸ் தூதுக்குழு பரிந்துரைகள் தோல்வியடையவே , காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கினார் . தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் ஆலைத் தொழிலாளர்கள் , மாணவர்கள் , பொது மக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர். இது நாடுதழுவிய போராட்டமாக அமைந்தது . பக்கிங்ஹாம் கர்னாடிக் ஆலை , துறைமுகப் பொறுப்புக் கழகம் , டிராம்வே ஆகியவற்றின் தொழிலாளர்கள் என உழைக்கும் வர்க்கத்தினர் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர் . வடஆர்க்காடு , மதுரை , கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பரவியது . ராஜபாளையம் , காரைக்குடி , தேவகோட்டை ஆகிய இடங்களில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது . சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசிய ராணுவத்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண் , பெண் வீரர்கள் சேர்ந்து விடுதலைக்காக போராடினர் . 1947 ஆகஸ்டு 15 ல் இந்தியா விடுதலையடைந்தபோது , ஒ.பி. ராமசாமி ரெட்டியார் தலைமையிலான சென்னை அரசாங்கம் இந்திய விடுதலைச் சட்டத்தைப் பாராட்டி தீர்மானத்தை இயற்றியது . # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

Post a Comment

Previous Post Next Post