Title of the document
வீட்டில் இருந்து பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கான வழிகாட்டு நெறிகளை பணியா ளர் மற்றும் பயிற்சித் துறை வெளி யிட்டுள்ளது. அதன் விவரம்:

கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள சவால்களை மத்திய அரசின் துறைகள் திறம்பட எதிர்கொண்டு வருகின்றன. மின்னணு அலுவலக நடைமுறை வெற்றிகரமாக அமல் செய்யப்பட்டிருக்கிறது, காணொலி காட்சி மூலம் முக்கிய ஆலோசனை கூட்டங்கள் நடை பெற்று வருகின்றன.

மத்திய அரசு ஊழியர்களின் நலன் கருதி வீட்டில் இருந்து பணி யாற்றும் திட்டம் அமல் செய்யப் பட்டிருக்கிறது. இதற்கு தேவை யான மடிக்கணினி, கணினிகளை சம்பந்தப்பட்ட துறைகள் வழங்க வேண்டும். இணைய சேவைக் கான கட்டணத்தை ஊழியர்கள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

முக்கிய அலுவலக கோப்பு களை மின்னணு முறையில் கையாளும்போது அவை குறித்த தகவல்களை உயரதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்க வேண்டும். வீடுகளில் இருந்து பணி யாற்றும் ஊழியர்கள், ரகசிய ஆவ ணங்களை கையாளக்கூடாது.

அலுவலகம் வழங்கிய மடிக் கணினி, கணினியில் மட்டுமே அலு வலக பணிகளை மேற்கொள்ள வேண்டும்.உயரதிகாரிகள் செல்போனில் அழைக்கும்போது உடனடியாக பதில் அளிக்க வேண்டும். இனிவரும் காலத்தில் மத்திய அரசு ஊழியர்கள் ஓராண்டில் 15 நாட்கள் வீட்டில் இருந்து பணியாற்ற கொள்கை ரீதியாக ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post