அம்மா சாரிட்டபிள் டிரஸ்டுடன் இணைந்து
இந்து தமிழ் திசை வழங்கும் ‘சிந்தனைச் சிறகுகள்’
குழந்தைகளின் படைப்பை மே 7 வரை அனுப்பலாம்
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் அனைவரும்
வீட்டிலிருந்தபடியே சமூக இடை வெளியைக் கடைபிடித்து வரு கிறோம்.
இந்நிலையில் குழந்தைக ளிடம் மறைந்திருக்கும் ஓவியம் வரைதல், கதை, கவிதை
எழுதுதல் ஆகிய தனித்திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் அம்மா சாரிட்டபிள்
டிரஸ்டுடன் இணைந்து இந்து தமிழ் திசை ‘சிந்தனைச் சிறகுகள்’ எனும் அரிய
வாய்ப்பை வழங்குகிறது.
5 முதல் 12-ம் வகுப்பு வரை
இதில், தமிழகம் முழுவதும் உள்ள 5 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும்
மாணவ-மாண விகள் பங்கேற்கலாம். 5 முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவ,
மாணவியர் ஓவியங்களை வரைந்து அனுப்ப வேண்டும். 9 முதல் 12-ம் வகுப்புவரை
உள்ளவர்கள் கவிதை, கதைகளை எழுதியனுப்ப வேண்டும்.
தங்களின் படைப்புகளை contesttamil@hindutamil.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, +91 9940699401 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கோ அல்லது https://connect.hindutamil.in/ எனும் இணைய பக்கத்துக்கோ மே 7-ம் தேதி வரை அனுப்பி வைக்கலாம்.
Post a Comment