30.05.2020 முதல் தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும், தவறும்பட்சத்தில் துறைரீதியான நடவடிக்கை - CEO உத்தரவு.

Join Our KalviNews Telegram Group - Click Here
தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 30.05.2020 முதல் பணிக்கு திரும்ப வேண்டும் - விழுப்புரம் மாவட்டக் கல்வி அலுவலர். IMG_20200519_105935 கொரானோ வைரஸ் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மார்ச் / ஏப்ரல் 2020 - இடைநிலை பொதுத்தேர்வினை ஒரு அறைக்கு 10 நபர்கள் என்ற வீதத்தில் தேர்வு எழுதுவதற்கு கூடுதலாக அறை கண்காணிப்பாளர்கள் தேவைப்படுவதால் , வட்டாரக்கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு / ஊராட்சி ஒன்றிய / நிதியுதவி தொடக்க / நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து , வருகின்ற 30.05.2020 முதல் 12.06.2020 வரை தவறாமல் வருகைதர வேண்டுமெனவும் , தனியாக வருகைப் பதிவேட்டினை மேற்கொண்டு அனைத்து ஆசிரியர்களின் வருகையை பதிவுசெய்து உடனுக்குடன் பெற்று இவ்வலுவலகம் அனுப்பி வைக்குமாறும் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதற்கான ஒப்புதல் கடிதத்தினை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . குறிப்பு- இது தேர்வுகள் அவசரம் என்பதால் ஆசிரியர்கள் எவ்வித சுணக்கமும் இன்றி செயல்பட வேண்டுமெனவும் அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு திரும்புமாறும் தெரிவிக்கப்படுகிறது. தவறும்பட்சத்தில் எவ்வித விளக்கம் கோரப்படாமல் தங்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது . 🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்