Title of the document
பள்ளிகளை ஜூலை 1ம் தேதி திறக்க அனுமதிக்க கோரி தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில துணைத் தலைவர் செந்தில்குமார், மாவட்டத் தலைவர் அர்ச்சுணன், பொருளார் ரவிச்சந்திரன், செயலர் வெங்கடாஜலபதி ஆகியோர் பள்ளி திறப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஆய்வுக்குழு தலைவருக்கு அனுப்பியுள்ள மனு விபரம்: கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது படிப்படியாக கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. துரித நடவடிக்கை மேற் கொண்டு தடுப்பு நடவடிக்கை செய்த மத்திய, மாநில அரசுகளுக்கு சங்கத்தின் சார்பில் நன்றியும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவர்கள் நலன் கருதி தமிழகத்தின் அனைத்து கல்வி நிலையங்களும் ஜூலை 1ம் தேதியில் இருந்து துவங்கிடவும், சமூக இடைவெளி, உரிய பாதுகாப்புடன் கல்வி நிலையங்களை நிர்வகிக்கவும், குறைந்த ஆசிரியர்களை கொண்டு வரும் கல்வியாண்டிற்கு பாடத்திட்டங்களை தயாரிக்கவும், பாதுகாப்புடன் பள்ளிகளை தொய்வின்றி நடத்திடவும், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்திடவும்அனுமதியளிக்க வேண்டும். # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post