விடுமுறை என்றாலே அனைவருக்கும் கொண் டாட்டம்தான். ஆனால், இந்த கரோனா
விடுமுறையை நாம் வழக்கமான விடுமுறை போல பயன்படுத்த இயலாது. வெளியூர் செல்ல
முடியாது. வெளியே செல்ல முடியாது. நண்பர்களு டன் சேர்ந்து விளையாட
முடியாது. பக்கத்து வீட்டுக்குக்கூட செல்ல இயலாது. அவரவர் வீட்டுக்குள்ளேயே
சிறைப்பட்டு வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இந்த இக்கட்டான சூழலை பெரியவர்களால் புரிந்துகொள்ள முடியும். குழந்தைகள்
என்ன செய்வார்கள். அவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதோடு, மகிழ்ச்சியாக
வும் வைத்திருக்க வேண்டியது நம் பொறுப்பு அல்லவா! என்ன செய்யலாம்? நம்
பாரம்பரிய விளையாட்டுகளை சொல்லித் தருவதற்கான வாய்ப்பாக இந்த விடுமுறையைப்
பயன்படுத்திக் கொள்ளலாம். பல்லாங்குழி, பரம பதம், தட்டாங்கல், குச்சிகளை
அடுக்குதல், ஆடு புலி போன்ற விளையாட்டுகளை குடும்பத்தோடு விளையாடி
மகிழலாம்.
உங்களுக்கும் பால்ய காலம் நினைவுக்கு வரும். குழந்தைகளும் பாரம் பரிய
விளையாட்டுகளை அறிந்துகொள்வார்கள். ‘நான் யார்?’ (Who am I) என்ற
விளையாட்டு வயது வித்தியாசமின்றி எல்லோரையும் சுவாரஸ்யப் படுத்தும். ஒருவர்
மனதுக்குள் பெயர், பொருள், இடம் போன்றவற்றை நினைத்துக்கொள்ள வேண் டும்.
எதிராளி கேள்விகள் கேட்க வேண்டும். பெயரை நினைத்தவர் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’
என்று மட்டுமே சொல்ல வேண்டும். காந்தி என்று நினைத்தால், ‘உயிர் உண்டா?’
என்று முதல் கேள்வியை ஆரம்பிக்கலாம். ‘ஆம்’ என்றால் ‘இந்தியாவைச்
சேர்ந்தவரா?’ என்று அடுத்த கேள்வியைக் கேட்கலாம். ‘தேசத் தலைவரா?’,
‘அகிம்சையின் அடையாளமா?’ என்று சில கேள்விகளில் ‘காந்தி’ என்ற பெயரைக்
கண்டுபிடித்துவிடலாம்.
எவ்வளவு குறைவான கேள்விகளுக்குள் யார் என்பதைக் கண்டுபிடிப்பதுதான் இந்த
விளையாட்டின் சுவாரஸ்யம். இந்த விளையாட்டுக்கு நேரம், காலம் தேவையில்லை.
தோன்றும்போது எல்லாம் விளையாடி மகிழலாம். பொது அறிவை வளர்க்கக்கூடிய
அற்புதமான விளையாட்டு இது. செய்தித்தாளைக் கொடுத்து, ஒரு பக்கத்தில் எத்தனை
முறை ‘கரோனா’ என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது என்பதைக் கண்டுபிடிக்க
வைக்கலாம். ஒரு கதையில் எத்தனை வார்த்தை கள் ஓர் எழுத்தில் ஆரம்பிக்கின்றன
என்பதைக் கண்டுபிடிக்க வைக்கலாம்.
ஆங்கிலம், தமிழ் அகராதியில் தினமும் 5 வார்த்தைகளுக்கு அர்த்தம்
கண்டுபிடிக்க வைக்கலாம். விடுகதைகள் சொல்லி, யார் சரியாக விடை
சொல்கிறார்கள் என்று போட்டி வைக்கலாம். அதிக விடைகள் சொன்னவருக்கு பரிசு
தரலாம். வீட்டிலேயே விநாடி-வினா நடத்தலாம். அறிவியல், வரலாறு, விளையாட்டு,
சினிமா, அரசியல் போன்ற துறைகளில் கேள்விகள் கேட்டு, யார் அதிக அளவில்
சரியான விடை சொல்கிறாரோ, அவருக்குப் பரிசு வழங்கலாம்.
Post a Comment