Title of the document
இந்தியாவின் பல மாநிலங்களில் பல பல்கலைக்கழகங்கள் இந்தப் படிப்பை நடத்தினாலும் டெகராடூனிலுள்ள பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் பல்கலைக்கழகம் இதில் முதன்மையானது. இது எம்.எஸ்சி., பாரஸ்ட்ரி படிப்பை நடத்துகிறது. இதில் 33 சீட்கள் உள்ளன. பி.எஸ்சி., தகுதி பெற்றிருப்பவர் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான நுழைவுத் தேர்வு மே 24 அன்று நடத்தப்படவுள்ளது. தென்னிந்தியாவில் பெங்களூருவிலும் கோவையிலும் மட்டுமே இதை எழுதலாம். பி.எஸ்சி., விவசாயம் தகுதி பெற்றிருப்பவரும் விண்ணப்பிக்கலாம்.
இதே நிறுவனத்தில் எம்.எஸ்சி., மரத் தொழில்நுட்பம், எம்.எஸ்சி., சுற்றுச்சூழலியல், போஸ்ட் மாஸ்டர்ஸ் டிப்ளமோ இன் நேச்சுரல் ரிசோர்சஸ் மேனேஜ்மென்ட், போஸ்ட் மாஸ்டர்ஸ் டிப்ளமோ இன் நான்-வுட் பாரஸ்ட் புராடக்ட் போன்ற படிப்புகளையும் நடத்துகிறது. முழு விபரங்களை
அறிய http://friuniversity.icfre.gov.in, www.icfre.gov.in என்னும் இணைய தளங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post