Important Links

Title of the document 95 43 43 43 97 - TN Police Exam 2020 - Free Coaching Class Contact : 9543434397
நம் தலைமுறையில் இது வரை சந்திக்காத புதியதொரு பிரச்சினையை கடந்த இரண்டு மாதமாய் அனுபவித்து வருகிறோம். கோவிட் -19  என்றால் என்ன இதனால் நாம் கற்றுக்கொண்டவை என்ன என இந்த கட்டுரையில் தெளிவுபடுத்தலாம் என நினைக்கிறேன். 

இந்த கோவிட் -19  கடுமையான சுவாச நோய்க்குறி (SARS) வகையை சார்த்த வைரஸ் குடும்பத்தை சார்ந்தது. இது விலங்குகளில் இருந்து பரவக்கூடிய தோற்று கிருமி. இந்த  கோவிட்  (COVID)-19 வகை வைரஸானது சீனாவில் நவம்பர் மாதம் முதல் பரவ தொடங்கியது. பின்னர் வவ்வால் (BATS) மூலம் இது மனிதர்களுக்கு பரவியதை உறுதிப்படுத்தப்பட்டது. 

முதலில் இது கொரானா  வைரஸ் என்று அழைக்கப்பது, பின்பு உலக வைரஸ் வகைப்படுத்தும் அமைப்பு (International Committee on Taxonomy of Viruses) இதன் பெயரை கோவிட்  (COVID)-19 என மாற்றியது. உலக சுகாதார அமைப்பு (WHO-WORLD HEALTH ORGANIZATION) தலையிட்டு இதை ஒரு பண்டெமிக்  (PANDEMIC ) வகை வைரஸ் பரவல் என டிசம்பர் மாத இறுதியில் அறிவித்தது.

இந்த நிலையில் உலக நாடுகளில் இந்த வைரஸ் வெகு வேகமாய் பரவி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இதுவரை உலக அளவில் 23,31,353 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,60,800 பேர் மரணமடைந்துள்ளார். இந்தியாவில் மட்டும் 16,365 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பதாகவும் 521 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது (19-04-2020 அன்று நிலவரப்படி). 

இதன் நோய்  அறிகுறிகள் தனித்துவம் வாய்ந்தவை. காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி அல்லது பேதி மற்றும் மூச்சடைப்பு இவை அனைத்தும் ஒருவருக்கு இருக்குமாயின் அவர் அரசாங்க மருத்துவ மனையை அணுகி உங்களுக்கு நோய் இருக்கிறதா என உறுதிப்படுத்தும் சோதனையை செய்துகொள்ளலாம். அல்லது நோய்  தொற்று  உள்ளவரோடு நீங்கள் ஏதோனும் ஒருவகையில் தொடர்பு கொண்டிருந்தால் முன்னெச்சரிக்கையாக நீங்கள் பரிசோதனை செய்து கொள்ளலாம்.உங்களுக்கு தோற்று ஏற்பட்டு 14-28 நாட்களுக்குள் எப்போதும் வேண்டுமானாலும் அறிகுறிகள் தெரியவரலாம். 

ஆகையால் இதை மிகவும் ஜாக்கிரதையோடு அணுகுதல். நலம். குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயது முதிந்தவர்கள், நீரழிவு நோயாளிகள் (DIABETIC PATIENTS’), இதய நோயாளிகள் (HEART PATIENTS’), உயர் ரத்த அழுத்தம் (HIGH BLOOD PRESSURE), நுரையிரல்  நோய்  (LUNG DISEASES) உள்ளவர்களை இன்னும் அக்கறையோடு பேணுதல் நல்லது. 

இந்த வைரஸை கட்டுப்படுத்த என்ன செய்யவேண்டும். தனிமனித இடைவெளி தான் இதை கட்டுப்படுத்த முதல் வழி. னாய் தோற்று உள்ளவர் தும்மும்போது காற்றின் மூலம் பரவ வாய்ப்புள்ளதால் வெளியில் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்வோர் முகமூடி (N -95 MASK)  அணிவது  கட்டாயம். தொடுதல் மூலம் பரவுவதால் அடிக்கடி  கை  கழுவுவது நல்ல பலன் தரும். இது மேலும் பலருக்கு பரவாமல் இருக்கவே அனைத்து நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடி விட்டன. மக்கள் வீட்டில் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

மனித குலத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்த கோவிட்  (COVID)-19 கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரியை அழிக்க அறிவியல் சமூகமும் (Scientists) மருத்துவ சமூகமும் (Doctors ) இணைந்து  போராடி வருகின்றனர். இதற்கு இன்னமும் தடுப்பு மருந்துகளோ, முறையான மருந்தோ கண்டுபிடிக்கப்படவில்லை என்பது உறுதி. அதற்கான வேலைகள் ஒரு புறம் நடந்து வந்தாலும், ஒரு உயிரி தொழில்நுட்பவியல் ஆராய்ச்சியாளராக இதுவரையில் ஆராய்ச்சியாளர்கள் இந்த கோவிட்  (COVID)-19-ஐ கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளனர் என்பதை சொல்லவே இந்த கட்டுரை.

இந்த கோவிட்  (COVID)-19 நோய்  தொற்று நவம்பர் 17ஆம் தேதி 2019 முதன் முதலில்  அறிவிக்கப்பட்ட நாளில்  இருந்து மூன்றாம் வாரம் இதன் டி. என். ஏ  (DNA)  தனியாக பிரித்து எடுத்து விட்டனர். அதன் பின் டி. என். ஏ வரிசை படுத்தப்பட்டு (SEQUENCING) இணையத்தில் பதிவேற்றப்பட்டுவிட்டது. கோவிட்  (COVID) பற்றிய ஆராய்ச்சிகள் உலக அளவில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 3000 அதிகமான ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன (SOURCE : https://www.ncbi.nlm.nih.gov/pubmed/?term=covid+19)

கோவிட்  (COVID)-19-ஐ கட்டுப்படுத்த மூன்று  வகையான ஆயுதங்கள் தேவை. 
1. கோவிட்  (COVID)-19-ஐ கண்டறியும் சோதனை கருவிகள்  (DIAGNOSTIC KITS) 
2. கோவிட்  (COVID)-19 வருமுன் தடுக்க தடுப்பூசி (COVID-19 VACCINE)
3. கோவிட்  (COVID)-19 வந்தவர்களை காக்க தடுப்பு மருந்துகள் (DRUGS)

ஆராய்ச்சியாளர்கள் சமூகம் இதை நோக்கித்தான் பயணித்துக்கொண்டு இருக்கிறர்கள்.  கோவிட்  (COVID)-19-ஐ கண்டறியும் சோதனை கருவிகள் இரண்டு வகை டி. என். ஏ  மூலம் கண்டறியும் RT-PCR  வகை மற்றொன்று ஆன்டிபாடி மூலம் கண்டறிவது. இந்த இரண்டு வகையான சோதனை கருவிகளும் பயன்பாட்டில் உள்ளன. அடுத்த உத்தியான தடுப்பூசி தயாரிக்கும் பணியில் உலகெங்கும் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாய்  முயர்சித்துக்கொண்டுள்ளனர். 

தடுப்பூசிகள் கண்டறிய என்ன வகையான உத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என நேச்சுர்  (NATURE REVIEWS : DRUG DISCOVERY ) ஒரு விரிவான கட்டுரை "The COVID-19 vaccine development landscape" என்ற தலைப்பில் இம்மாதம் 9ஆம் தேதி  வெளியிட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (INDIAN COUNCIL  FOR MEDICAL  RESEARCH) இந்திய அளவிலான ஆராய்ச்சிகளை தொகுத்து, அதன் பரிந்துரைகளை நமது  நடுவண் அரசுக்கு  பரிந்துரைகளை செய்துகொண்டுள்ளது. 

மூன்றாவதாக கோவிட்  (COVID)-19 பாதித்தவர்களை மீட்டு எடுக்க மருந்துகளை கண்டறிவது. இன்றைய அவசர சூழலில் புதியதாக மருந்துகள் கண்டறிவது அத்துணை எளிதல்ல. கோவிட்  (COVID)-19 என்ன என்ன புரதங்கள் சுரக்கின்றது. அந்த புரதங்களின் (PROTEIN) பணிகள் என்ன என வகை படுத்த வேண்டும். Main protease (Mpro)/chymotrypsin-like protease (3CLpro) and RNA polymerase இந்த இரண்டு புரதங்களும் தடுப்பு மருந்துகள் தயாரிக்க உகந்தவையாக ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.குறிப்பிட்ட புரதங்கள் அதன் பணியை செய்ய விடாமல் தடுக்க வேண்டும். இதை ஆராச்சியாளர்கள் மொழியில் சொல்வதென்றால் DRUG  TARGETING  என்பார்கள். கண்டுபிடித்த மருந்துகளை சோதனை செய்ய வேண்டும் (PRE-CLINICAL AND CLINICAL  TRIALS (PHASE 1-4 )) இவை அனைத்தும் குறுகிய காலத்தில் செய்து முடிப்பது என்பது இயலாத ஒன்று. 

மாற்றாக என்ன செய்யலாம் என்றால் ஏற்கனவே உள்ள தடுப்பு மருந்துகள் இந்த கோவிட்  (COVID)-19-ஐ செயலிழக்க செய்கிறதா என பார்க்கவேண்டும். Bioinformatics துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் கணிப்பொறியின் உதவி கொண்டு எத்தனை மருந்துகள் வேண்டுமானாலும் குறுகிய நேரத்தில் கண்டுபிடிக்க முடியும். FOOD AND DRUG ADMINISTRATION (FDA) ஏற்கனவே அங்கீகரித்துள்ள மருந்துகளை கோவிட் (COVID)-19-க்கு எதிராக மறுபயன்பாடு செய்வதற்கு பயோ-இன்ஃபர்மேடிக்ஸ் துறை (BIOINFORMATICS) பெரிதும் பயன்படுகிறது.  இப்படித்தான் ஹைட்ராக்ஸி குளோரோகுயினோன் (HYDROXY CHLORQUINONE) மற்றும்  அஜித்ரோ மைசின் (AZITHROMYCIN) இரண்டும் இப்போது கோவிட்  (COVID)-19 பாதித்த நோயாளிகளை குணமாக்கி வருகின்றன. ஆராய்ச்சியாளர்களின் பங்கு என்பது மறுக்க மற்றும் மறைக்க முடியாத உண்மை. 

எப்போதும் லைப் சயின்ஸ் (LIFE SCIENCES) படிப்பார்வலுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்ற ஒன்றை  சொல்லி வருகிறார்கள். இன்று லைப் சயின்ஸ் துறை ஆராய்ச்சியாளர்கள் இல்லை என்றால் மனித குலம்  பெரும் இன்னலை சந்தித்திருக்கும் என்பதை பழைய வரலாற்றை பார்த்தால் புரியும். கி.பி இரண்டாம் நூற்றாண்டில் வந்த பிளேக் நோய்க்கு 50 லட்ச்சத்திருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால்  இன்று ஆராய்ச்சியாளர்களின் மற்றும் மருத்துவர்களின் சீரிய முயற்சியால்.4,04, 442 பேர் குணமடைந்துள்ளனர். மற்றவர்களும் விரைவில் சுகமடைந்து வீடு சேர்வர் என்பது திண்ணம்.

இன்று  உலக மக்கள் அனைவரும் உயிரி தொழில்நுட்பவியலின் (BIOTECHNOLOGY/LIFE  SCIENCES ) மகத்துவத்தை புரிந்துகொண்டிருக்கிறார்கள். மேலும் ஆராய்ச்சியாளர்கள், தாவரத்தில் இருந்து பிரித்தெடுத்த கலவைகள் (NATURAL PHYTOCOMPOUNDS), புதிய மருந்துகள்  (NOVEL DRUGS),புரதங்கள் (PROTEINS), துண்டு செய்யப்பட்ட புரதங்கள் (PEPTIDES), ஆன்டிபாடிகள் (ANTIBODIES)  போன்றவற்றின்பால் தீவிர  ஆராய்ச்சிகள் மேற்கொண்டுள்ளனர் புதிய  நோய்களிலிருந்து மானிட சமூகத்தை காக்கவே. 

இந்த சூழ்நிலையில் உலகத்தாருக்கு நினைவூட்டுவது என்னவென்றால்  பாரம்பரிய மருந்துகளை எங்ஙனம் முழுமையான அணுகுமுறையோடு இந்த புதிய கோவிட் (COVID)-19  வைரஸை அழிக்க  பயன்படுத்தலாம் என்பதே. 

ஒரு  கல்வியாளராக நான் இதை சொல்கிறேன், நமது மாணவர்களை சமூக அக்கறையுள்ள குடிமக்களாக வளர்த்தெடுப்பது மிக முக்கியம். நான்  இங்கேபெருமையுடன் கூறிக்கொள்கிறேன், எங்கள் மாணவர்கள் "உன்னத் பாரத் அபியான்"(UNNAT BHARAT ABHIYAAN) என்ற மத்திய அரசின் அமைப்பின் கீழ்,  எவ்வாறு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது, தனிமனித சுகாதாரம், சரிவிகித உணவு, நோய்  எதிர்ப்பு சக்தி போன்றவற்றை மையப்படுத்தி தொடர்ந்து சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர். எங்களிடம் படித்த சில மாணவர்கள் உயர் கல்வி பயில அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கே அவர்கள் பயிலும் மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கப்பட்டுள்ள கோவிட் (COVID)-19 நோயாளிகளின் நலம் காக்க தன்னலமற்று, தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருகின்றனர். 

பெற்றோர்களுக்கு என் வேண்டுகோள் என்னவென்றால்,  லைப் சயின்ஸ் துறையின் தேவைகளையும் அதன் மகத்துவத்தையும் நீங்களே புரிந்துக்கொண்டிருப்பீர்கள். உங்கள் மகன் அல்லது மகளை லைப் சயின்ஸ் உயிரி தொழில்நுட்பவியல் (BIOTECHNOLOGY) துறையில் சேர ஊக்கப்படுத்துங்கள்.  ஏனென்றால் உலகெங்கும் நிறைய வாய்ப்புகள் நிறைந்திருக்கிறது. நல்ல ஈடுபாடுள்ள மாணவர்களே நாளை உலகை காக்கும் ஆராய்ச்சியாளர்கள். நல்ல மாணவர்கள் நல்ல ஆராய்ச்சியாளர்கள் ஆவர். இவர்களால் மானுடம் வெல்லும்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post

TN Police Exam 2020 - Free Class - 9543434397