Important Links

Title of the document 95 43 43 43 97 - TN Police Exam 2020 - Free Coaching Class Contact : 9543434397
வூஹான்: சீனாவின், வூஹான் நகரில் உள்ள கிருமியியல் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் பெண் மூலம், &'கொரோனா&' தொற்று பரவத்துவங்கியதாகவும், வவ்வால் இறைச்சியில் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக, சீனா சொல்வது பொய் என்றும், &'வாஷிங்டன் போஸ்ட், பாக்ஸ் நியூஸ்&' செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.

சீனாவின், ஹுபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் இருந்து தான், கொரோனா தொற்று, பரவத்துவங்கியது. ஒட்டுமொத்த சீனாவில், ஹுபே மாகாணத்தில் மட்டும் தான், உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டது. பீஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களில், மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே உயிரிழப்புகள் ஏற்பட்டன.வூஹான் நகரில் மிகப் பெரிய இறைச்சி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு, மாடு, பன்றி, பாம்பு, கீரி, நாய் உள்ளிட்ட விலங்குகளின் இறைச்சி விற்பனை செய்யப்படுகின்றன.

உயிரி யுத்தம்

இந்த சந்தையில் விற்கப்பட்ட வவ்வாலிடம் இருந்து தான், கொரோனா வைரஸ், மனிதர்களுக்கு பரவியதாக, சீனா தெரிவித்தது. பின், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளை அழிக்க, சீனா தொடுத்த உயிரி யுத்தம் தான் இந்த தொற்று எனவும் புகார் கூறப்பட்டது. ஆனால், இதற்கான ஆதாரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.இந்நிலையில், அமெரிக்காவின், &'பாக்ஸ் நியூஸ்&' மற்றும், &'வாஷிங்டன் போஸ்ட்&' நாளிதழ், ஒரு, &'பகீர்&' தகவலை வெளியிட்டு உள்ளன.

சீனாவின், வூஹான் நகரில் உள்ள அதிநவீன கிருமியியல் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் பெண் ஊழியருக்கு,தவறுதலாக கொரோனா தொற்று பரவியதாகவும்,அவரிடம் இருந்து, அவரது ஆண் நண்பருக்கு பரவி, பின் சீனா முழுதும் தொற்று ஏற்பட்டதாகவும் செய்தி வெளியிட்டு ள்ளன.

கிருமி வங்கி

வூஹானின் மையப்பகுதியில் அமைந்துள்ள கிருமியியல் ஆராய்ச்சி மையம், 2015ல், 315 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. ஆசியாவின் மிகப் பெரிய கிருமி வங்கியாக இது கருதப் படுகிறது. மேலும், 1,500க்கும் மேற்பட்ட மிகக் கொடூரமான நோய் கிருமிகள், இங்கு ஆய்வு செய்யப்படுகின்றன. அவை ஆராய்ச்சியாளர்களை பாதித்துவிடாதபடி, மிக பாதுகாப்பான நவீன வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

இங்கு, &'பி4&' எனப்படும், மிக அபாயகரமாக கிருமிகளை ஆய்வு செய்யும் ஆராய்ச்சி கூடம், 2018 ல் கட்டப்பட்டது. இந்த ஆராய்ச்சி கூடம் மட்டுமே, 32 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது. இங்கு தான் கொரோனா வைரஸ் பாதுகாக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வந்ததாகவும், அப்போது எதிர்பாராத விதமாக, அங்கு பணியாற்றும் ஊழியருக்கு தொற்று பரவியதாகவும், கூறப்படுகிறது.

ஏ.எப்.பி., செய்தி நிறுவனத்தை சேர்ந்த நிருபர், இந்த ஆராய்ச்சி கூடத்துக்கு சமீபத்தில் சென்ற போது, அங்கு ஆய்வுப் பணிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என கூறினார். வதந்தி பரப்பாதீர்கள்மேலும், நுழைவுவாயிலில், &'கடும் கட்டுப்பாடுகள் உள்ள பகுதி, பதற்றம் அடைய வேண்டாம், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு செவி கொடுக்கவும், அறிவியலை நம்புங்கள், வதந்தி பரப்பாதீர்கள்&' என, எழுதப்பட்டு உள்ளதாக கூறினார்.

இது குறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, கூறியதாவது: 

வூஹான் கிருமியியல் ஆராய்ச்சி மையத்தில் இருந்து கொரோனா தொற்று பரவியதா என்று தான், அந்நாட்டு அதிகாரிகள் முதன் முதலில் விசாரணையை துவங்கினர். அதன் பின், இறைச்சி சந்தை வழி பரவியதாக கூறப்பட்டது.அந்த ஆராய்ச்சி கூடத்திற்குள், வேற்று நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்களை, சீனா அனுமதித்தது இல்லை. இனியும் அனுமதிக்கப் போவதில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

இந்த குற்றச்சாட்டை, சீனா மறுத்துள்ளது.இது குறித்து, சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், ஸாவோ லிஜியன் நேற்று கூறுகையில், &'&'குழப்பத்தை ஏற்படுத்தவும்,மக்களின் கவனத்தை திசை திருப்பவும், பொறுப்பில் இருந்து தப்பிக்கவுமே, இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன,&'&' என்றார்.சீனாவில் உள்ள, &'லான்செட்&' மருத்துவ இதழில், கடந்த ஜனவரியில் வெளியான கட்டுரையில், &'சீனாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர், வூஹான் இறைச்சி சந்தையுடன் தொடர்பு இல்லாதவர்&' என கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post

TN Police Exam 2020 - Free Class - 9543434397