Title of the document
சென்னை: கல்லுாரி படிப்பில், ஆறு பாடங்களுக்கு, புதிய பாடத்திட்டத்தை, பல்கலை மானிய குழு அறிவித்துள்ளது.
கல்லுாரி பாடங்களில் உள்ள அம்சங்களை செயல்படுத்தும் விதமாக, கற்றல் வெளிப்பாடு திட்டத்தில், புதிய பாடத்திட்டங்களை பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., உருவாக்கி வருகிறது. இந்த வரிசையில், இயற்பியல், கணிதம், ஆங்கிலம், மானுடவியல், உளவியல், நுாலக அறிவியல், தாவரவியல், புள்ளியியல், ஊடகவியல் போன்ற, 19 பாடங்களுக்கு, ஏற்கனவே புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, சட்டம், தொல்லியல், சமஸ்கிருதம், பாதுகாப்பு படிப்பு, வேதியியல் மற்றும் விலங்கியல் ஆகிய படிப்புகளுக்கு, புதிய பாடத்திட்டத்தை, யு.ஜி.சி., அறிமுகம் செய்துள்ளது. விபரங்களை, www.ugc.ac.in என்ற, இணையதளத்தில் பார்க்கலாம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post