அறிவியல் உண்மை : மின்விசிறியின் வேகத்தை எவ்வளவு கூட்டினாலும் குறைத்தாலும் ஒரே அளவு மின்சாரம்தான் செலாவழியுமா?

Join Our KalviNews Telegram Group - Click Here
இல்லை,  மின்விசிறியின் வேகத்தை மாற்றுவதற்கு இரண்டு வகையான திருகு சுவிட்சுகள் இருக்கின்றன. பழைய வகை திருகு சுவிட்சில்,  மின்தடையைக் கூட்டினால் மின்விசிறியின் வேகம் குறையும். மின்தடையைக் குறைத்தால் மின்விசிறியின் வேகம்  கூடும். விசிறி வேகமாகச் சுற்றும்போது மின்தடையில் குறைவான மின்னாற்றல் விரயமாகும். மெதுவாகச் சுற்றும்போது மின்தடையில் அதிகமான மின்னாற்றல் விரயமாகும்.

images%2528138%2529

புதுவகை திருகு சுவிட்சில்,  SCR என்ற மின் சில்லைப் பயன்படுத்தி மின்விசிறியின் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம். இந்த வகையில் மின்விசிறியின் வேகம் மாறும்போது மின்னாற்றல் வீணாவதில்லை
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்