Title of the document
கரோனா பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரம் முடங்கியுள்ள அதேநேரத்தில், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னையில் கடந்த மார்ச் 23-ம் தேதி ரூ.3,087-க்கு விற்ற ஒரு கிராம் தங்கம்(22 காரட்) ஏப்.21-ம் தேதி ரூ.4,044-க்கு விற்கப்பட்டது. மார்ச் 23-ம் தேதி ரூ.3,244-க்கு விற்கப்பட்ட 24 காரட் தங்கம், ஏப்.21-ம்தேதி ரூ.4,413-க்கு விற்கப் பட்டது.ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டு இருந்தாலும், சுப நிகழ்வுகள் தள்ளிவைக்கப்பட்டா லும் ஆன்-லைன் வர்த்தகம்தொடர்வதால் தங்கத்தின் விலை உயர்வும் தொடர்கிறது.

அதேநேரம், கடந்த ஒரு மாதமாக நகைக்கடைகள் மூடப்பட்டு இருந் ததால், அக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள ஆபரண நகை களின் மதிப்பு தற்போது கிராம் ஒன்றுக்கு ரூ.1,169 உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து பொருளாதார பேராசிரியரான புதுச்சேரி முன்னாள் எம்.பி ராமதாஸிடம் கேட்டபோது, “சர்வதேச அளவில் கரோனா பரவலால் பொருளா தாரம்முடங்கியுள்ள நிலையில் தங்கத்தின் வரவு குறைந்து, விலை உயர்ந்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலை குறைவும் ஒரு காரணம். அதில் முதலீடுசெய்தவர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தற்போது ஆர்வம் காட்டுவதாலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது’’ என்றார்.

இதுகுறித்து விழுப்புரம் நகர தங்க நகைக்கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் சி.கன்னியாலிடம் கேட்டபோது, “பெரிய அளவில் தங்க வர்த்தகத்தில் ஈடுபடு வோருக்கு மட்டுமே இந்த விலை உயர்வு லாபத்தை தரும். ஊரடங்கால் மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து இருப்பதால் தங்கநகை வியாபாரம் சீரடைய 6 மாதங்களுக்கு மேல் ஆகும்’’ என்றார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post