Title of the document
நீங்கள் சுங்கசாவடிகளை கடக்கும் போது பல முறை பாஸ்ட் டேக் என்ற ஒரு தனியாக ஒரு லைன் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அதன் விழியாக செல்லும் வாகனம் நிற்க்காமல் நேராக செல்லும். அந்த வாகனங்கள் நிற்காமல் செல்வதால் அவர்களுக்கு சுங்கசாவடி கட்டணம் கிடையாது என்று எண்ணி விடாதீர்கள் அவர்கள் பாஸ்ட் டேக் என்ற கார்டை பயன்படுத்தி சுங்க சாவடி கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
பாஸ்டேக் கார்டு என்பது ஒரு ஐ.டி கார்டு போன்றது.



இதை வாங்கி நாம் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் பொருத்தி கொள்ள வேண்டும். மேலும் இந்த கார்டிற்கு நாம் தேவையான அளவிற்கு பணத்தை முன்பேசெலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.


இப்படி நாம் ஏற்கெனவே ரீ சார்ஜ் செய்து வைத்திருக்கும் கார்டை வாகனத்தின் முன்பக்ககண்ணாடியில் பொருத்தினால் நமது வாகனம் சுங்கசாவடியில் நுழையும் இடத்திலேயே வைக்கப்பட்டிருக்கும் ஸ்கேனர் கருவி மூலமாக, நம் வாகனத்தின் பதிவுஎண்களை கண் இமைக்கும் நொடியில் கண்டறிந்து நமது வருகையை பதிவு செய்து கொள்ளும். ஸ்கேனர் கருவி, நமது வாகனத்தின் பதிவு எண்களைக் குறித்துக் கொண்டு, நாம் முன்னரே ரீசார்ஜ் செய்து வைத்திருக்கும் பணத்தில் இருந்து அந்த சுங்கசாவடிக்கான பணம் மட்டும் கழிக்கப்பட்டு விடும். மேலும் அந்த லேனில் அடைத்திருக்கும் பாதையும்தானாக திறந்து, நமது வாகனத்துக்கு வழிவிடும். இதன் மூலம் சுங்கசாவடியில் பணம் செலுத்துவதற்காக வாகனங்களை வரிசைகட்டி நிறுத்துவதை தவிர்க்கலாம்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post