Title of the document
ஒரு அரசுப்பள்ளி ஆசிரியராக
என்னுள் விழுந்த விதை விருட்சமான உண்மை கதை இது..!!
ஆம். ஒரு International school ல் பயிலும் குழந்தைக்கு கற்றுக்கொள்ள கொடுக்கும் வசதி வாய்ப்புகளை ஏன் என்னிடம் பயில வரும் குழந்தைகளுக்கு தரக்கூடாதா..
என்ற எண்ணங்கள் நான் பணிக்கு வந்த காலம்முதல் என்னுள் ஓடிக்கொண்டே இருந்தது..
சரி..
ஒரு வகுப்பறையை  சகல வசதிகளோடு.. மற்றவர்களின் உதவிகளை பெறாமல் எனக்கு நானே என்ற கொள்கையோடு எவ்வாறு கட்டமைப்பது என்பதை உணர்ந்தவாறு ஒரு கனவு உண்டியலோடு எனது பயணம் ஆரம்பமானது!!
அதில் சிறுக சிறுக (DA arrears, Pongal bonus, RP  ( பயிற்சியாளராக training)ஆக செல்லும் போது கிடைக்கும் Renumeration தொகை.. மற்றும் எனது செலவுகளை குறைத்துக்கொண்டு சேமிக்கும் வழக்கம் ஆகியவற்றின் மூலம்
Speakers, Bluetooth amplifier, கற்றலை எளிமைப்படுத்த பல்வேறு கற்பித்தல் உபகரணங்கள்(All subjects) மற்றும் குழந்தைகள் அமர்வதற்கு ஏற்ற furnitures என்று ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து  எனது உழைப்பில் Rs.80000/ ல் எனது கனவு வகுப்பறையை உருவாக்கியுள்ளேன்!!
நமது கனவினை நாமே நிஜமாக்குவதில்   கிடைக்கும்
மனநிறைவு வேறெங்கும் கிடையாது!!











எனது குழந்தைகள் இத்தனை வசதிகளோடு கல்வி பயிலுகிறார்கள் என்பதை பார்த்த அவர்களின் பெற்றோர்களின் முகங்களின் காணும் பெருமையை அளவிட என்னிடம் அளவுகோல் இல்லை. என்னிடம் பயில வரும்
ஒவ்வொரு குழந்தையும் சாதிக்க வேண்டும்!! சாதிப்பார்கள்...என்ற நம்பிக்கை ஒரு ஆசிரியராக என்னுள் எப்போதும் உண்டு!!
நன்றி.!
Geetha sadeesh
P.U.M.School,geetha sadeesh Pennadam_West.
Nallur block, Cuddalore Dt. # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

Post a Comment

Previous Post Next Post