தொழில்நுட்பக் கல்வி இயக்கு நரகம் நடத்திய தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து தொழில்நுட் பக் கல்வி இயக்குநர் விவே கானந்தன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சார்பில் கடந்த ஆகஸ்டில் நடத்தப்பட்ட தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்), சுருக் கெழுத்து (தமிழ், ஆங்கிலம்) மற்றும் கணக்குப்பதிவியல் ஆகிய தேர்வுகளின் முடிவுகள் www.tndte.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வலைதளத்தில் சென்று தேர்வர்கள் தங்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.