ஓய்வூதியதாரர்கள் வாழ்வு சான்றிதழை டிச.31-க்குள் செலுத்த வேண்டும்

Join Our KalviNews Telegram Group - Click Here


ஓய்வூதியதாரர்கள், வரும் ஆண்டுக்கான வாழ்வு சான்றி தழைநவம்பர் 1-ஆம் தேதி முதல் டிசம்ர் 31 தேதிக்குள் வங்கியில் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்கள், 2020-ஆம் ஆண்டுக்கான வாழ்வுச் சான்றிதழை மாதாந்திர ஓய்வூதியம் பெறும் வங்கிக் கிளை களிலேயே வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை செலுத்தலாம். இந்த வசதி வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக ஓய்வூதியம் பெறும் வங்கிகளையோ அல்லது ஜீவன் பிரமான் மையங்களையோ அணுகலாம். அருகிலுள்ள ஜீவன் பிரமான் சேவை மையங்களை அறிந்து கொள்ள https:/jeevanpamaan.gov.in/locator எனும் இணை யதளத்தையும், மேலும் விவரங்களுக்கு ro.ambattur@epfindia.gov.in எனும் அம் பத்தூர் வருங்கால வைப்பு நிதி அலுவலக இணையதளம், 04426350080,26350120 ஆகியதொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் அம்பத்தூர் மண்டல ஆணையர் சௌரப்ஸ்வாமி தெரிவித்துள்ளார்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..