மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கான தேசிய திறனாய்வுதேர்வை தமிழகத்தில் 1.50 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
பத்தாம் வகுப்பு மாணவர் களுக்கு ஆராய்ச்சி படிப்பு முடிக் கும் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான தேசியதிறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் மாநில அளவில் நடத்தப்படுகிறது.அதன்படி இந்த ஆண்டுக் கான முதல்நிலைத் தேர்வு தமிழ கம் முழுவதும் 514 தேர்வு மையங் களில் நேற்று நடைபெற்றது. காலை 9 முதல் 11 மணி வரை அறிவுத்திறன் தேர்வும், அதன் பின் 11.30 முதல் மதியம் 1.30 மணி வரை கல்வித்திறன் தேர்வும் நடை பெற்றது.இந்த தேர்வுகளை சுமார் 1.50 லட்ச மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வுகள் சற்று கடின மாக இருந்ததாக மாணவர்கள் தரப் பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த திறனாய்வு தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பு வரை மத்திய அரசு சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.