அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்க” - உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை அடிக்கடி ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை அடிக்கடி ஆய்வு செய்ய முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் சிறப்புக் குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேபோன்று தொடக்க கல்வி மாணவர்களின் எழுதுதல் மற்றும் அடிப்படை கணிதம் செய்தலை உறுதி செய்தல் வேண்டும், இதை செய்யத் தவறும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை சேர்ந்த செளபாக்யவதி தொடர்ந்து மனுவின் விசாரணையின் போது இந்த உத்தரவுகள் பிறக்கப்பிக்கப்பட்டுள்ளன.