பட்டதாரி ஆசிரியர்களுக்கு இந்தாண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு கிடையாது. திருவண்ணாமலை CEO அலுவலக தகவல்!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 2019-2020 கல்வி ஆண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்விற்கான விண்ணப்பங்களை வழங்க சென்றுள்ளனர். 

அங்கிருந்த அலுவலர் பட்டதாரி ஆசிரியருக்கான கலந்தாய்வு நடைபெறாது என்றும் விண்ணப்பங்களை வாங்க இயலாது எனக்கூறி திருப்பி அனுப்பி உள்ளனர். கடந்த மூன்று தினங்களாக இவ்வாறு திருப்பி அனுப்பி விட்டதால் பொதுமாறுதலில் கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த பட்டதாரி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.