சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் இந்தாண்டு முதல் நீட் தேர்வு: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831

சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் இந்தாண்டு முதல் நீட் தேர்வு முறைப்படி மாணவர் சேர்க்கை நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


 மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கு நீட் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மருத்துவ கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த வருட சேர்க்கைக்கான நீட் தேர்வு நடந்து முடிந்து முடிவுகளுக்காக மாணவர்கள் காத்துக்கொண்டிக்கின்றனர்.

சித்தா, ஆயுர், யுனானி, ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து ஒரு வருடம் தமிழகம் விலக்கு பெறப்பட்டிருந்த நிலையில் சென்ற வருடம் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சித்தா ஆயுர்வேத படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்றது.


ஆனால், இந்தாண்டு சித்தா, யுனானி, ஆயுர்வேத படிப்புகளுக்கு எதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மாணவர்களிடையே ஒரு குழப்ப நிலை நிலவி வந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.


 அதன்படி, இந்தாண்டு முதல் சித்தா, யுனானி, ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கும் நீட் தேர்வு முறைப்படி தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


அதே நேரத்தில் யோகா & நேச்சுரோபதி மருத்துவப்படிப்புக்கு மட்டும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.


 மேலும் இந்தாண்டில் இளங்கலை மருத்துவ படிப்பில் 3,350 இடங்களும், முதுகலை படிப்பில் 508 இடங்களும் கூடுதலாக கிடைக்க உள்ளது ஆகிய தகவல்களை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்ற வருடம் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சித்தா ஆயுர்வேத படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்ற நிலையில் இந்த வருடமும் 12ம் மதிப்பெண் அடிப்படையில் சித்தா படிக்கலாம் என நினைத்து நீட் தேர்வெழுதாத மாணவர்களை இந்த தகவல் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

 தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.