Title of the document


மத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.பாஜக தலைவராக இருந்த அமித்ஷாவுக்கு மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர்,மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன்,மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர், மத்திய சட்டத்துறை அமைச்சராக ரவி ஷங்கர் பிரசாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

*நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக நியமனம் - கார்ப்பரேட் விவகாரங்களையும் கவனிப்பார்

*ராஜ்நாத் சிங் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமனம்

*பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஜவுளித்துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி நியமனம்

*வெளியுறவுத்துறை அமைச்சராக எஸ் ஜெயசங்கர் நியமனம்

*ரயில்வே துறை மீண்டும் பியூஸ் கோயலுக்கு ஒதுக்கீடு - தொழில் மற்றும் வர்த்தகத்துறையும் ஒதுக்கீடு

*நிதின் கட்கரிக்கு தரைவழிப் போக்குவரத்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை ஒதுக்கீடு

*சதானந்த கவுடா உரத்துறை அமைச்சராக நியமனம்

*உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சராக ராம் விலாஸ் பஸ்வான் நியமனம்

*நரேந்திர சிங் தோமர் விவசாயத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக நியமனம்

*சட்டத்துறை மற்றும் தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக ரவிசங்கர் பிரசாத் நியமனம்

*சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக முக்தர் அப்பாஸ் நக்வி நியமனம்

*உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சராக ஹர்சிம்ரத் கவுர் பாதல் மீண்டும் நியமனம்

*தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் நியமனம் - சுற்றுச் சூழல் துறையையும் கவனிப்பார்

*பெட்ரோலியத்துறை அமைச்சராக தர்மேந்திர பிரதான் நியமனம்

*நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக பிரஹலாத் ஜோஷி நியமனம்

*சமூக நீதி மற்றும் அதிகாரம் அளிப்புத்துறை அமைச்சராக தவார் சந்த் கெலாட் நியமனம்

*ரமேஷ் பொக்ரியால் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமனம்

*பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக அர்ஜூன் முண்டா நியமனம்

*சுகாதாரத்துறை அமைச்சராக ஹர்சவர்தன் நியமனம்

*திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை மகேந்திரநாத் பாண்டேவுக்கு ஒதுக்கீடு

*கால்நடை, பால் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக கிரிராஜ் சிங் நியமனம்

*பிரதமர் அலுவலகங்களுக்கான இணை அமைச்சராக (தனி பொறுப்பு) ஜிதேந்திரா சிங் நியமனம்

*தனிப் பொறுப்புடன் கூடிய விளையாட்டுத்துறை இணை அமைச்சராக கிரண் ரிஜிஜு நியமனம்

*தனிப் பொறுப்புடன் கூடிய சுற்றுச்சூழல்துறை இணை அமைச்சராக பிரஹலாத் சிங் படேல் நியமனம்

*தனிப் பொறுப்புடன் கூடிய மின்சாரத்துறை இணை அமைச்சராக ஆர்.கே.சிங் நியமனம்

*தனிப்பொறுப்புடன் கூடிய கப்பல் போக்குவரத்துறை இணை அமைச்சராக மன்சுக் மாண்டவியா நியமனம்

*தரை வழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சராக வி.கே.சிங் நியமனம்

*வெளியுறவுத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சராக வி முரளிதரன் நியமனம்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post