எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு நீதிமன்ற வேலை - 65 ஆயிரம் சம்பளம்

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831
Image result for court job
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில், நேரடி நியமனம் மூலம் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் பற்றிய அறிவிப்பும், சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற அலகில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் பற்றிய அறிவிப்பும் வெளியாகி உள்ளன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள் மற்றும் காலியிடங்கள்:
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள நீதிமன்ற பணிகள்: (137+22=159)
1. கம்ப்யூட்டர் இயக்குநர் - 5
2. நகல் பரிசோதகர் - 5
3. முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் - 9
4. இளநிலை கட்டளை நிறைவேற்றுநர் - 18
5. ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் - 1
6. ஓட்டுநர் - 2
7. அலுவலக உதவியாளர் - 51
8. மசால்சி - 11
9. அலுவலக காவலர் / இரவுகாவலர் - 26
10. பெருக்குபவர் - 10
11. துப்புரவுப் பணியாளர் - 6


சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற அலகில் உள்ள பணிகள்: (73)
1. ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் - 5
2. அலுவலக உதவியாளர் - 50
3. சுகாதார பணியாளர் - 1
4. காவலர் - 17
5. துப்புரவுப் பணியாளர் - 3
6. மசால்ச்சி - 10
7. வாட்டர்மேன் - 1
8. கழிவறை சுத்தம் செய்பவர் - 1

மொத்தம் = 232 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள நீதிமன்ற பணிகளுக்கான விண்ணப்ப படிவத்தினை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31.05.2019, மாலை 05.45 மணி.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவுக் காவலாளி உள்ளிட்ட பணிகளுக்கான விண்ணப்ப படிவத்தினை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 03.06.2019, மாலை 05.45 மணி.
சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற அலகில் உள்ள பணிகளுக்கான விண்ணப்ப படிவத்தினை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 04.06.2019, மாலை 05.45 மணி.

வயது வரம்பு:
1. பொது பிரிவினர் - குறைந்தபட்சமாக 18 வயதும், அதிகபட்சமாக 30 வயதும் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - குறைந்தபட்சமாக 18 வயதும், அதிகபட்சமாக 32 வயதும் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
3. எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் - குறைந்தபட்சமாக 18 வயதும், அதிகபட்சமாக 35 வயதும் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

ஊதியம்:
குறைந்தபட்சமாக ரூ.15,700 முதல் அதிகபட்சமாக ரூ.65,500 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.

குறிப்பு:
பணிகளை பொருத்து மாதச் சம்பளங்களில் மாற்றங்கள் உண்டு.

கல்வித்தகுதி:
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு, குறைந்தபட்சமாக எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் அதிகபட்சமாக டிகிரி படித்து தேர்ச்சி பெற்றவர்கள் வரையும் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு:
1. பணிகளை பொருத்து கல்வித்தகுதிகளில் மாற்றங்கள் உண்டு.
2. இரவு காவலாளி உள்ளிட்ட சில பணிகளுக்கு, தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தாலே போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை:
1. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள நீதிமன்ற பணிகளுக்கு, ஆன்லைனில் https://districts.ecourts.gov.in/india/tn/kanchipuram/notification- என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பின்பு அதனை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் சேர்த்து கீழேயுள்ள முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:
முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,
செங்கல்பட்டு - 603001.
காஞ்சிபுரம் மாவட்டம்

சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற அலகில் உள்ள பணிகளுக்கு விண்ணப்பிப்போர், ஆன்லைனில், https://districts.ecourts.gov.in/india/tn/chennai/notification-என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பின்பு அதனை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் சேர்த்து கீழேயுள்ள முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:
ஒம்./ஆர்.செல்வகுமார்,
முதன்மை நீதிபதி,
நகர உரிமையியல் நீதிமன்றம்,
சென்னை - 600104
மேலும், இது குறித்த முழுத் தகவல்களுக்கு, https://districts.ecourts.gov.in/sites/default/files/Notification_4.pdf, https://districts.ecourts.gov.in/sites/default/files/Criminal%20Unit%20Recruitment%20May%202019.pdf, மற்றும் https://districts.ecourts.gov.in/sites/default/files/Notification%2001%202019_0.pdf - போன்ற இணையதள முகவரிகளில் சென்று தெரிந்து கொள்ளலாம்