7 அரசு பள்ளிகளுக்கு, 'பூட்டு!' மாணவர் எண்ணிக்கை குறைவால் நடவடிக்கைநீலகிரியில், குன்னுார், கூடலுார் கல்வி மாவட்ட கட்டுப்பாட்டில், 51 அரசு உயர்நிலை, 35 மேல்நிலை, வட்டார கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில், ஆரம்ப பள்ளி, நடுநிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. மாவட்டத்தில், சில ஆண்டுகளாக, 20 ஆரம்பப் பள்ளிகள், எட்டு நடுநிலை, ஆறு உயர்நிலை பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை, தொடர்ந்து குறைந்து வந்தது.


இந்நிலையில், மூன்று தொடக்கப் பள்ளிகள் மற்றும் தலா, இரண்டு, நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில், சொற்ப அளவில், மாணவர் எண்ணிக்கை உள்ளதால், அப்பள்ளிகளின் மாணவர்கள், அருகில் உள்ள, அரசு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், நாசருதீன் கூறியதாவது: சில பகுதிகளில் மட்டும், மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்ததால், அங்கு பயிலும் மாணவர்கள், அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்களும், வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர். இனி, அந்த பள்ளிகளில், மக்கள் ஒத்துழைப்போடு, மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்படும். பின், பள்ளிகளை, மீண்டும் திறந்து, செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.