Title of the document



மதுக் கடை ஊழியர்களுக்கு, எழுத்து தேர்வு, பாடத் திட்டம் தொடர்பாக, இன்று விழிப்புணர்வு கூட்டம் நடத்தும்படி, மாவட்ட மேலாளர்களுக்கு, 'டாஸ்மாக்' நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம் நடத்தும், மதுக் கடைகளில் பணிபுரிவோரில், பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு, சிறப்பு தேர்வு நடத்தி, 500 பேருக்கு, இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட உள்ளது; இதற்கான தேர்வு, ஆகஸ்டில் நடத்தப்பட உள்ளது.


இந்நிலையில், இளநிலை உதவியாளர் பணிக்கான தேர்வு குறித்து, இன்று, மாவட்ட தலைமை அலுவலகங்களில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தி, பாடத் திட்டம், தேர்வு முறை போன்றவற்றை தெரிவிக்கும்படி, மாவட்ட மேலாளர்களுக்கு, டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த கூட்டம் தொடர்பான அறிக்கையை, தலைமை அலுவலகத்திற்கு அனுப்புமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post