19,426 பேருக்கு கட்டாய பணிநிரவல். ஆனால் நிர்வாக மாறுதலுக்கு மட்டும் எப்படி பணியிடம் இருக்கிறது?


2019-20 ஆம் ஆண்டுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியவாறு நிர்வாக மாறுதல் எப்போது வேண்டுமானாலும் வழங்கலாம். 19,426 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதாகவும் அவர்கள் கட்டாய பணிநிரவல் செய்யப்படுவார்கள் எனவும் கூறும் பள்ளிக்கல்வித்துறை நிர்வாக மாறுதல் என்ற பெயரில் பல லட்சங்களை பெற்றுக்கொண்டு தென் மாவட்ட பள்ளிகளுக்கு எவ்வாறு பணிமாறுதல் வழங்குகிறது. தென் மாவட்டங்கள் அனைத்திலும், அனைத்து பாடங்களுக்கும் உபரி ஆசிரியர்கள் இருக்கும்போது நிர்வாக மாறுதலுக்கு மட்டும் காலியிடம் எப்படி வருகிறது என அதிகாரிகள் விளக்கினால் நன்று. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வெளி மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் கேள்விக்கு விடைதருமா பள்ளிக்கல்வித்துறை.