உபரியாக உள்ள 19,426 ஆசிரியர்களுக்கு ஜூலை 9-ம் தேதி நடக்கும் கலந்தாய்வில் கட்டாய பணி மாறுதல் வழங்க உத்தரவு


உபரியாக உள்ள 19,426 ஆசிரியர்களுக்கு ஜூலை 9-ம் தேதி நடக்கும் கலந்தாய்வில் கட்டாய பணி மாறுதல் வழங்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பள்ளிகளில் பணியமர்த்துவதற்கான அரசாணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. உபரியாக உள்ள ஆசிரியர்கள் அவரவர் பணியாற்றும் மாவட்டத்துக்குள் கட்டாய பணி மாற்றம் செய்யப்படுவர் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.