Title of the document

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு: உயர்நீதிமன்றம் உத்தரவு

*ஓவிய ஆசிரியர், தையல் ஆசிரியர் பணியிடங்களில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டு சலுகையின்படி, பணி நியமனம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது*

*தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஓவிய ஆசிரியர், தையல் பயிற்சி ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டது*

*இந்தத் தேர்வில் பங்கேற்ற 80 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது*

*அந்த இடஒதுக்கீட்டின்கீழ் தங்களுக்குப் பணி நியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்*

*இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது*

*வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த சிறப்பு ஆசிரியர் பணிக்கு ஆன்லைன் மூலம் சமர்ப்பித்த விண்ணப்பத்திலும், சான்றிதழ் சரிபார்ப்பு படிவத்திலும் தமிழ் வழியில் படித்தவர்கள் என குறிப்பிட்டிருந்தவர்களுக்கு மட்டும், இடஒதுக்கீட்டு சலுகையின்படி உரிய நடைமுறைகளைப் பின்பற்றி பணி நியமனம் வழங்க வேண்டும்*

*அதே நேரத்தில் தமிழ்வழியில் படித்த விவரத்தை தெரிவிக்காதவர்களுக்கு இந்த இடஒதுக்கீட்டை வழங்கக் கூடாது என தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்*

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post