கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு, யு.பி.எஸ்.சி தேர்வில் குறையும் தமிழக தேர்ச்சி விகிதம்

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307

கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு, யு.பி.எஸ்.சி தேர்வில் குறையும் தமிழக தேர்ச்சி விகிதம்!

*தமிழகத்தில் கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு, யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விகிதம் வெகுவாக குறைந்து வருகிறது இந்தாண்டு வெறும் 39 பேர் மட்டுமே தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இது கல்வியாளர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது*

*மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) நடத்திய 2018 சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், 759 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்*

*அதில், 577 ஆண்கள்; 182 பேர் பெண்கள். இந்த தேர்வில், மும்பை ஐஐடியில் பி.டெக் படித்த கனிஷ்க் கட்டாரியா என்பவர் முதல் இடத்தை பிடித்துள்ளார். அக்ஷந் ஜெயின், இரண்டாம் இடம் பெற்றுள்ளார். ஸ்ருஸ்தி தேஷ்முக் பெண்களில் முதல் இடத்தை பிடித்துள்ளார். மொத்தமாக இவர் 5ம் இடத்தில் உள்ளார்*

*தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த முறை சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக மாணவர்கள், குறைந்த எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெறும் 39 பேர் மட்டுமே, இந்தாண்டு தமிழகத்தில் இருந்து யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்*

*இந்திய அளவில் 23வது இடத்தைப் பிடித்த ரிஷப் என்பவர், தமிழக அளவில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். சென்னை மதுராந்தகத்தைச் சேர்ந்த இவர், எம்.என்.எம்.ஜெயின் பொறியியல் கல்லூரியில் பி.இ படித்துள்ளார்*

*இவருக்கு, இன்போசிஸ் நிறுவனத்தில் கேம்பஸில் வேலை கிடைத்த நிலையிலும், ஐ.ஏ.எஸ் தேர்ச்சி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் படித்து, வெற்றியும் பெற்றுள்ளார்*

*இவர், மூன்றாவது முறையாக இத்தேர்வை எழுதி, தேர்வாகியுள்ளார்.49வது இடம் பெற்ற ரெஜினாமேரி இரண்டாம் இடமும், 50வது இடத்தை பிடித்த ரங்கஸ்ரீ தமிழக அளவில் மூன்றாமிடமும் பிடித்துள்ளனர்*

*தமிழகத்தில், முன்னதாக 100க்கும் அதிகமானோர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக, அதில் 50% கூட இல்லாதா நிலையில் தேர்ச்சி விகிதம் வந்த வண்ணம் உள்ளது*

*இந்த முறை 40க்கும் குறைவானவர்களே தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கல்வியாளர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது*

Post a Comment

0 Comments