பிளஸ்–1 பொதுத்தேர்வு நிறைவு மே 8–ந் தேதி முடிவு வெளியீடு

பிளஸ்–1 பொதுத்தேர்வு கடந்த 6–ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று கம்ப்யூட்டர் சயின்ஸ், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், உயிரி வேதியியல், புள்ளியியல் உள்பட சில பாடங்களுக்கான தேர்வு நடந்தது.  இதில் புள்ளியியல் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ–மாணவிகள் கருத்துகளை கூறினர்.  நேற்று நடந்த இந்த தேர்வுகளுடன் பிளஸ்–1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நிறைவடைந்து இருக்கிறது.    விடைத்தாள்களை திருத்தும் பணிகள் அடுத்த மாதத்தில் தொடங்கப்பட இருக்கின்றன.   தேர்வு முடிவுகள் வருகிற மே மாதம் 8–ந் தேதி வெளியிடப்பட இருக்கிறது.