கல்வியாளர்களை காப்பது தான் அரசின் கடமை.! கல்வியை காப்பதுதான் கல்வியாளர்களின் கடமை.!!!

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831
கல்வியாளர்களை காப்பது தான் அரசின் கடமை. கல்வியை காப்பதுதான் கல்வியாளர்களின் கடமை என மக்கள் நீதிக்கு மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.

ஆசிரியர்களின் போராட்டம் குறித்து கமலஹாசன் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, ”கல்வியாளர்களைக் காப்பது அரசின் கடமை என்றும், கல்வியைக் காப்பது கல்வியாளர்களின் கடமை என்றும் கூறியுள்ளார். அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது என்றும், தேர்வு நெருங்கும் வேளையில் நாளைய நம்பிக்கையாம் மாணவர்களின் கல்வியை காப்பது நமது கடமை என்றும் கூறியுள்ளார். .

மேலும், பேச்சு வார்த்தைகள் உரிமைக்காய் தொடருட்டும். கல்விச்சாலைகள் கடமைக்காய் திறக்கட்டும். எட்டு கோடித் தமிழர்களின் உணர்வுகளின் சார்பாய் இதுவே என் குரல்” என்று கமலஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

Post a Comment

0 Comments