சேலம் மாவட்ட, வேலைவாய்ப்பு துணை இயக்குனர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தொகுதி ஒன்றுக்கான, முதல்நிலை எழுத்துத்தேர்வுக்கு, www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். அதற்கு, வரும், 31 கடைசி நாள். அதற்கான, இலவச பயிற்சி வகுப்பு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வரும், 28 காலை, 10:00 மணிக்கு தொடங்கி நடக்கவுள்ளது.
சிறந்த வல்லுனர்களால் நடத்தப்படும் பயிற்சி வகுப்பில், பாட குறிப்பு இலவசமாக வழங்குவதோடு, மாதிரி தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ள மனுதாரர்கள், தங்கள் புகைப்படம், விண்ணப்பித்த விபரங்களுடன், நேரில் வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Post a Comment