🤔'அறிவியல் அறிவோம்' ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு பேச்சு வர தாமதமாகும்:

🤔ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு பேச்சு வர தாமதமாகும்:

   எவ்வளவு அதிகமாக குழந்தைகள் ஸ்மார்ட்ஃபோன், டேப்லெட் போன்ற கருவிகளை பயன்படுத்துகிறார்களோ, அதற்கேற்றார் போல அவர்கள் பேசும் திறன் தள்ளிப்போகும்.

30 நிமிடங்களுக்கு அதிகமாக கையில் ஸ்மார்ட்ஃபோன் போன்ற கருவிகளை வைத்திருக்கும்போது, அவர்கள் தெளிவாக பேசும் திறன் 49% தள்ளிப்போகிறது.

இன்று எல்லோரிடமும் கையில் ஒரு கருவி இருக்கிறது. குழந்தைகள் நலனுக்கான புதிய வழிகாட்டுத்தல்களில், குழந்தைகள் மொபைல் போன்ற கருவிகளை பார்க்கும் நேரம் குறைய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் ஸ்மார்ட்ஃபோன் கருவிகளை பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது. இப்போதுதான் முதல் முறையாக, அவர்கள் மொபைல் பயன்படுத்தும் நேரத்துக்கும், பேசும் திறனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில், குழந்தைகள் மற்றவர்களுடன் பேசுவது, உடல் மொழி, சைகை போன்றவைக்கும், மொபைல் கருவிகள் பயன்பாட்டுக்கும் தொடர்பு இல்லை .

குழந்தை பிறந்து 18 மாதங்களுக்கு, அவர்கள் மொபைல் போன்ற கையடக்க கருவிகளின் திரையை பார்க்கக்கூடாது.