
நீட் தேர்வுக்கு, அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க, நடவடிக்கை எடுக்க, அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்காக, ஸ்பீடு நிறுவனத்தின் ஆன்லைன் பயிற்சி வழங்கப்படுகிறது. தற்போது, நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான விண்ணப்ப பதிவு, ஆன்லைனில் நடந்து வருகிறது. சேலம் மாவட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனைக்கூட்டம், நேற்று சேலம் மரவனேரி செயின்ட் பால்ஸ் பள்ளியில் நடந்தது. இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வர் பட்டியல் தயாரிப்பது, நீட் தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு, விண்ணப்பிக்க உதவுவது உள்ளிட்ட பணிகள் குறித்து விளக்கினார். 120க்கும் மேற்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்
Post a Comment