🤔'அறிவியல் அறிவோம்' அலுமினிய பாத்திரத்தில் உணவை சமைத்து சாப்பிடுவது நல்லதா ?

Add This Number In Your Whatsapp Groups - 9786053272
📲👉 👉 Join Our KalviNews Telegram Group - Click Here

🤔அலுமினிய பாத்திரத்தில் உணவை சமைத்து சாப்பிடுவது நல்லதா ? 
நல்லதல்ல. ஏனெனில் அலுமினிய பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால், சமைக்கும் உணவில் அலுமினியம் கலந்துவிடுகிறது. பின் அவற்றை உட்கொள்ளும் போது, அவை இரத்த நாளங்கள் வழியே சில உறுப்புக்களில் தங்கி, ஆரோக்கியத்தை பாதிக்கிறது. 


அலுமினிய பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் சந்திக்கும் பிரச்சினைகள் :

1) நரம்பு மண்டலம் :
அலுமினிய பாத்திரங்களால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். இதற்கு அதில் உள்ள மின்துகள்கள் தான் காரணம். இதனால் தான் அல்சைமர் நோய் ஏற்படுகிறது.  

2)ஞாபக மறதி:
அலுமினிய பாத்திரங்கள் மனித மூளையைத் தான் தாக்கும். அதிலும் தொடர்ந்து அலுமினிய பாத்திரங்களைக் கொண்டு சமைத்து சாப்பிட்டு வந்தால், அதனால் மூளை நோய்கள் மற்றும் ஞாபக மறதி போன்றவை ஏற்படும். 

3)அதிகப்படியான சோர்வு:
தொடர்ச்சியாக அலுமினிய பாத்திரங்களில் சமைத்து சாப்பிட்டு வந்தால், ஒரு கட்டத்தில் திடீரென்று அதிகப்படியான சோர்வை சந்திக்கக்கூடும். சோர்விற்கான காரணத்தைக் கண்டறிய மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டால், அதற்கு காரணமாக இருப்பது அலுமினிய பாத்திரங்களாகத் தான் இருக்கும்.

4) ஆஸ்டியோபோரோசிஸ்:
அலுமினியம் எலும்பின் வளர்ச்சியைத் தடுத்து, அதில் அதிகப்படியான தேய்வை ஏற்படுத்தி, அதிகமாக எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தும். 
 
5) சிறுநீரகங்கள்:
அலுமினியம் பாத்திரத்தை அளவுக்கு அதிகமாக தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், பெருங்குடல் பாதிக்கப்படுவதோடு, அதனைத் தொடர்ந்துசிறுநீரகங்களும், இரத்தமும் பாதிக்கப்படும். 

6)புற்றுநோய்:
அலுமினியம் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று எவ்வித ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படாவிட்டாலும், இதனை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் எப்படி பெருங்குடல் பாதிக்கப்படுமோ, அதேப்போல் அதிகப்படியான பாதிப்பின் காரணமாக பெருங்குடல் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது  

👉மாற்று வழி :
  1)அலுமினிய பாத்திரங்களுக்கு சிறந்த மாற்றாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன்படுத்தலாம். அலுமினிய பாத்திரங்களுடன் ஒப்பிடுகையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களால் ஏற்படும் பாதிப்பு குறைவே.
2)மண் பாத்திரங்கள் இருப்பதிலேயே எவ்வித பக்கவிளையும் இல்லாத ஒரு வகையான பாத்திரம் தான் மண் பாத்திரங்கள். இதனால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதோடு, சமைக்கும் போது உணவின் சுவையும் அதிகரிக்கும்.
📲👉 👉 Join Our KalviNews Telegram Group - Click Here

Post a Comment

0 Comments