தீபாவளி விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. சில பள்ளிகள் மட்டும், வரையறுக்கப்பட்ட விடுமுறை அறிவித்துள்ளன.
நாடு முழுவதும், தீபாவளி பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும், அனைத்து தரப்பினரும், தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர். சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை, புத்தாடை உடுத்தியும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசு கொளுத்தியும் மகிழ்ச்சியை பரிமாறினர்
.
.
தீபாவளிக்காக, தமிழக அரசு சார்பில், கூடுதலாக ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதாவது, அரசு காலண்டர் அடிப்படையில், திங்கள்கிழமையன்று வேலை நாளாக இருந்தது. ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சொந்த ஊருக்கு செல்லும் வகையில், கூடுதலாக ஒரு நாள் விடுப்பு கோரினர். அதனை ஏற்ற அரசு, தீபாவளிக்காக, திங்கள் கிழமையும் விடுமுறை விடுவதாக அறிவித்தது
.
.
அதனால், சனிக்கிழமை முதல் நேற்று வரை, பள்ளி, கல்லுாரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை. நான்கு நாள் தொடர் விடுப்பு நேற்று முடிந்த நிலையில், இன்று மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது. பள்ளி, கல்லுாரிகள் வழக்கம் போல இன்று இயங்கும். அரசு அலுவலகங்களிலும், இயல்பான பணிகள் இன்று துவங்க உள்ளன. சில பள்ளிகள் மட்டும், இன்றும், வரையறுக்கப்பட்ட விடுமுறை அறிவித்துள்ளன. சி.பி.எஸ்.இ., தனியார் பள்ளிகளுக்கும், இன்று விடுமுறையாகும்.
Post a Comment