Title of the document

வங்க கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த புயலுக்கு கஜா என பெயரிடப்பட்டு உள்ளது. மேலும் வலுவடைந்து கொண்டிருக்கும் இந்த புயலால் இன்று (நவம்பர் 12) தென்மேற்கு வங்கக்கடலில் 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வாங்க கடலில் மையம் கொண்டிருக்கும் இந்தப் புயலின் தாக்கம் வடக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் வரும் நவம்பர் 14ம் தேதி காலையில் தான் தெரியவரும். அன்று காலை 55 முதல் 65 கிலோமீட்டர் வரை வீசத் துவங்கும் காற்று பின்னர் நள்ளிரவில் 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அறிவித்துள்ளது.




இதனால் தமிழகத்தில் வடக்கு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நம்பர் 14ஆம் தேதி மிதமான இடியுடன் கூடிய மழையும் தென் தமிழகத்தில் ஆங்காங்கே லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நவம்பர் 15ம் தேதி புயலானது வலுவடைவதால் அன்று தமிழகத்தின் வடக்கு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் தென் தமிழகத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


மேற்கு தென் மேற்காக வேகமாக நகர்ந்து வரும் கஜா புயல் வரும் 15-ம் தேதி புதுச்சேரி, கடலூர் பகுதியில் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் அடுத்த நான்கு நாட்களுக்கு அதாவது நவம்பர் 15ம் தேதி வரை தமிழகத்தில் வானிலை நிலை என்ன என்பதையும் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று இரவு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:



நவம்பர் 12 (இன்று) மற்றும் 13 (நாளை): தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே சில இடங்களில் லேசான மழை பெய்யும்.


நவம்பர் 14ஆம் தேதி: புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் வடக்கு கடற்கரை மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டையில் இடியுடன் கூடிய கனமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


நவம்பர் 15ம் தேதி: புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென்தமிழக மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post